சுக்கிரன் 5

சுக்ரன் லக்னத்தில் நின்றுவிடில் வசதிகளோடு நாகரீகமாக நாலுபேர் மெச்சும்படி வாழ்வர், சுக்கிரன், சனி இருவரும் 10 இடத்தில் இருப்பின் வீர்யசக்தி இழந்தவராய் இருப்பர். சுக்ரன், சந்திரன் சேர்ந்து 1,5,7,8,9மிடங்களில் இருந்தால் ஜாதகர் வாழ்க்கை துணையினை பிரிந்து வாழ நேரிடும்.

சுக்கிரன் 4

சுக்கிரன் நின்ற இராசிக்கு அடுத்த இராசியில் தனியே சந்திரனிருந்தால் திருமணவாழ்வில் பிரச்சனை ஏற்படும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கையும், பார்வையும் எந்த வீட்டில் ஏற்பட்டாலும் ஆண், பெண் சுக வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் நாசமாகிவிடும். சுக்கிரன் செவ்வாயோடு ஆறாம்பாவதிபனோடு சேர்ந்து இருந்தால் மனைவி மூலம் துக்கம் ஏற்படும்.

சுக்கிரன் 3

சுக்கிரனோடு சனி, செவ்வாய் சேர்ந்து சனி, செவ்வாய் வீட்டில் நின்றால் இல்லறம் சிறக்காது, செல்வமும் இருக்காது. சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து 7, 8ல் இருப்பின் சில சமயம் கொலைபாதகம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கும். சுக்கிரனும் , செவ்வாயும், இராகுவும் ஒரே ராசியிலிருந்தால் இன்னொருவரின் வாழ்க்கைத் துணையுடன் உறவு ஏற்படக்கூடும்.

சுக்கிரன் 2

சுக்கிரனுடன், செவ்வாய் இணைந்திருந்தால் விரும்பியவரை மணக்க விரும்புவர், எவர் தடுக்கினும் கேளாது விவாகம் செய்து கொள்வர். இணைந்து 7ல் நின்றுவிடில் இரண்டாம் தாராமாகவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுக்ரன் மனைவிக்கு எங்கு நிற்கிறதோ அதற்கு ஐந்து வீட்டுக்குள் கணவனுக்கு நின்றால், ஒரே பலம் கொண்டதாக இருக்கும், அன்புடன் ஆனந்த வாழ்வு அமையும்.

சுக்கிரன். 1

சுக்கிரன் எந்த லக்னத்தில் பிறந்தாருக்கும் லக்னத்தோடு இருப்பின் அழகிய தோற்றத்தோடும், இனிமையை நாடும் குணமுள்ளவராக இருப்பர். சுக்ரன் கேந்திரமான 1,4,7,10ல் நின்று உச்சம், ஆட்சியில் இருப்பின் சங்கீதம், நாட்டியம், நாடக துறையில் நாட்டம் ஏற்படும். செழிப்போடும் வாழ்வர்.  சொகுசான வீடு, சுகமான வாழ்வு அமையும்.

வியாழன் 16

குருவானவர் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் வீட்டுக்கு மூத்தவராக திகழ்வார்கள். குரு அல்லது சந்திரன் லக்னத்திலோ, 5ம் வீட்டிலோ, 9ம் வீட்டிலோ இருப்பின் அவர் ஆசிரியராகவும் சிறந்த கட்டுரை எழுதுபவராக இருப்பர். குரு 6,8,12ல் நின்றிடில் குழந்தைகள் பிறப்பது அரிது.  குழந்தைகள் குணம் கெட நேரிடும். குருவும், சனியும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டாலும், சனி, லக்னம் அல்லது ராசிக்கு 10ல் இருந்தால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டு பேரும் புகழும் அடைவர். குருவானவர், ஜென்ம சந்திரன், ரிஷபம், மிதுனம், கடகம்,…

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா..

ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். அந்த ஊரில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில்…

அன்போடு 2

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு அந்த பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான் இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்….? உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான் இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான் நான் எடை அதிகமாக…

அன்போடு…. 1  

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு இல்லையேப்பா நல்லா தானே இருக்கு என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   2

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.  இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான்.  குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.  கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’ அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ…

தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்   1

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.  அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.  ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’  ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள்.…

நல்லது கெட்டதுகளுக்கு யார் காரணம்? 

ஒருநாள், அந்த துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம். ‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா? ’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.  துறவி சிரித்தார். ‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே…

நான் அந்த சகோதரனைப் போல்

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என்…

புகையிலை வரலாறு..

கி . பி. 1405 – ல் கொலம்பஸ் இந்தியாவுக்கு கடல்வழி காண புறப்பட்டார்.  அப்போது வழியில் மேற்கிந்திய தீவில் தங்க நேரிட்டது.  அவர் கியூபாவைச் சுற்றி பார்த்தபோது அங்கிருந்த கியூபா நகரவாசிகள் சோளத்தட்டை சருகைச் சுருட்டிப் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதைப் பார்த்த கொலம்பஸ் அதிசயித்து தான் சென்ற நாடுகளில் எல்லாம் இந்தப் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.  அது உலகப் பழக்கமாகி விட்டது.  இதுதான் புகையிலை வரலாறு..

சைக்களில் சாதனை பயணம் செய்த இளம் பெண்

 நீ ஒரு பெண் உன்னால் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் முடியாது இப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் அதையெல்லாம் தகர்த்து ஒரு பெண் 4,500 கிலோ மீட்டார் சைக்கிளில் பயணம் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு அவர்களுடைய பெற்றோர்களே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இவர் பெயர் அனாஹிதா ஸ்ரீபிரசாத் என்ற இளம் பெண் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிரை இவர் வெற்றிபயணம். பெண்கள்  பாதுகாப்புப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பயணத்தை மேற்கொண்டார். 2015ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்கி சந்தித்த…

தலைநகரம் பிறப்பெடுத்தது எப்படி?

1639 – ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆக்ரா இந்தியாவுக்கு தலைநகராக இருந்தது. மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தனர். ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றினார். 

எந்த மனிதன்

எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான். பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

எந்தவிதக் கொள்கையும்

சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும். எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

அடக்கம்

அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன் சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 12

6 – க்குடையவர், 7 – இல், 5 – க்குடையவர் 6 – இல் ராகுவுடன் சேர்ந்தால் நீர் வியாதி, இளைப்பு போன்ற ரோகமும், சத்துருக்களால் தொல்லையும் ஏற்படும். புத்திரங்களுக்கு நோய் ஏற்படும். 6 – க்குரியவர் 4, இல் 8, 11 – லிருப்பின் சூதாட்டம், ரேஸ், குடிப்பழக்கம் இவைகளால் கடன் ஏற்படும். மனைவி வர்க்கத்தில் அவமானம் தரும். மூத்திர இருச்சின ரோகம் ஏற்படும். மகரம், மிதுனம், லக்கினமாக குரு நீச்சம் பெற, சுக்கிரன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 11

6, 12 – க்குரியவர் பரிவர்த்தனம் பெற்று இருப்பின் இளம் வயதில் குன்ம நோய் ஏற்படலாம். 6 – இல் சந்திரன், கேது சேர்க்கை இருப்பின் ரத்த குஷ்ட நோய் ஏற்படும். 1 – க்குரியவர் 8 – இல் சனி, புதன், ராகு சேர்க்கை மத்திம வயதிற்கு மேல் வாத ரோகம் ஏற்படும். 1- க்குரியவர் 6 – இல் ( அ ) 12 – க்குரியவர் 1 – இல் மிருகங்களால் பயம்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 10

6 – இல் செவ்வாய் இருந்து, 6 – க்குரியவர் பாவர் சேர்க்கை பெற்று இருப்பின், இளம் வயதிலும், அந்திம வயதிலும் கடுமையான உஷ்ண நோய் உண்டாம். 6 – இல் குரு, 12 – இல் சந்திரன் இருப்பின் இளம் வயதில் வயிற்று வலி, குடல், நோய் உண்டாம். 6 – இல் இராகு, சந்திரன், சனி, இருப்பின், 1 – க்குரியவர் 6 – லிருப்பின் மத்திம வயதில் கொடி ரோகம் உண்டாகும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 9

சூரியன், செவ்வாய் பரிவர்த்தனம் பெற்றாலும், எதிர் கேந்திரம் பெற்றாலும், அம்சத்திலிருப்பினும், அடிதடி சண்டையில் தொல்லை ஏற்பட்டு கஷ்டம் ( அ ) மாரகம் ஏற்படலாம். 1, 2, 7 – ல் சூரியன், செவ்வாய் சேர்க்கை இருப்பினும், சூரியனையோ ( அ ) செவ்வாய் பார்வை பெற்றாலும் கடுமையான நோய்கள் ஏற்படும். 8 – இல் சனி, செவ்வாய் சேர்க்கை ( அ ) 8 – இல் சனி 12 – இல் செவ்வாய் இருப்பினும்,…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 6

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்.…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 5

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை 4

மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு? எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 3

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள். யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 2

உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும். சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு் உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல்…

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 1

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்! எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும். நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ…