சுந்தர யோக சிகிச்சை முறை 125

ஒவ்வொரு கருவியும் தம் தம்மிடத்தில் பெரிடோனியத்தில் நிறுத்தப் பட்டுள்ளது. இது வயிற்றுச் சுவரில் ஒட்டியிருந்தாலும், சில இடங்களில் அதைவிட்டுவிலகி, கருவிகளைப் போர்வை போல் மூடியும் சிலவற்றுடன்  ஒட்டிக்கொண்டும் இருக்கிறது பெருங்குடலில் இது பரவும் பொழுது, மேஸெண்ட்ரீஸ்  ( MESENTRIES ) என்று அழைக்கப்படுகிறது. இவைகள் ரத்தக் குழாய் போவதற்கு இடம் கொடுக்கின்றன. இந்த பெரிடோனியம் தனியாய் நிற்குமிடங்களிலெல்லாம் ஒரு விதமான வழுக்கும் ரசம் பரவி இருக்கிறது. இதன் மகிமையால் உள் அடங்கிய கருவிகள் மேலும், கீழுமாய் உறுத்தலின்றி…