சுந்தர யோக சிகிச்சை முறை 124

இக்குழியில் எங்கோ பெருங்குடல் அசைக்க முடியாமல் ஒட்டப்பட்டிருக்கிறதென்று நினைக்க வேண்டாம். இச்சதைப் பெட்டியின் உட்பாகத்தை மிருதுவாய் அமைக்க, பெரிடோனியம் ( PERITONEUM ) என்ற தெளிவு சதை  ( MEMBRANE ) கோணிப்பை போல் அமைந்து, பல அங்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இதன் மேல், ஒன்றன் மேலொன்றாய், கண்டபடி கருவிகள் குவித்து வைத்திருக்கப்படவில்லை.