ஒவ்வொரு நாளும் காலம்

ஒவ்வொரு நாளும் காலம் நம் உடம்பை தின்று கொண்டிருப்பது மனிதர்களுக்கு தெரிவதே இல்லை காலன் மனிதனின் காலுக்கு அடியிலோ, முதுகுக்கு பின்னோ இருப்பதை அவன் அறிவதில்லை. மாயை மறைக்கிறது என்ற நினைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு என்ன நினைப்பது? எப்படி நினைப்பது?

வெற்றியாளர்கள்

திறமையற்றவர் என்று யாரும் இல்லை தனக்கு எதில் திறமை என்று அறியாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம் அவர்களே உலகத்தோரின் கண்முன் தோல்வியாளர்களாக தென்படுகின்றனர். அவரவர்களுக்கு எதில் திறமை என்று அறிந்தவர்கள் அதை சரியான சந்தர்பத்தில் மிக சரியாக பயன்படுத்தி வெற்றியாளர்களாக உலகோர் முன் காட்சி அளிக்கின்றனர்.

லோகாதாய வாழ்க்கையினால்

உலகாதாய இலக்குகளை அடைய அதை பற்றிய வெளி உலக அறிவை பெற வேண்டிய அவசியம் உள்ளது. நாம் நம் வாழ்வை அதனோடு மட்டுமே என்று இருக்கும் போது அதிலிருந்து நமக்கு கிடைக்கும் லோகாதாய பயனால் நம்முள் அகங்காரம் வளர்கிறது. அது நாம் பிறறை மதிக்க வேண்டும் மூத்தோர்களை குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே இல்லாமல் செய்துவிடுகிறது அது மட்டுமல்லாமல் சுய நலமும் எவேராடும் ஒட்டாத பண்பும் எதையும், எவரையும் மிக அலட்சியபடுத்தும் தன்மையும்…

நமது கலாச்சாரம் 3

நமது பெண்கள் மேலை நாட்டு பெண்கள் போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் (அதாவது உடை, ஒழுக்கம், வேலை, அறிவு) நாம் நமது கலாச்சாரத்தை இழந்துவிடுவோம் இது ஏனோ நமக்கு புரியவில்லை காரணம் நமது பெண்கள் தங்களின் தூய தவ வாழ்வை இழக்க நேரிடும் அதனாலேயே அந்த மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் வேண்டாம் என்று நமது சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறது.

நமது கலாச்சாரம் 2

ஏதாவது காரணம் சொல்லி நம் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக்கொண்டே இருந்தால் இழப்பு நமக்கும் நமது அடுத்த தலைமுறையினர்க்கும் அடுத்தது மிக முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும் தான்.

நமது கலாச்சாரம் 1

இந்திய நாட்டின் மிக பெரிய சொத்து எது என்று கேட்டால் அதனுடைய கலாச்சாரம் தான். கலாச்சாரம் என்று நாம் எதை குறிப்பிட்டு சொல்லுவது உண்மையில் நம்முடைய கலாச்சாரம் என்பது நம்முடைய வாழ்க்கை முறைதான் நம் வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்க வழக்கங்கள் ஆகட்டும், உடையாகட்டும், பேச்சு அதாவது மொழி, கலை, தினசரி நாம் மேற்கொள்ளும் பணிகள் நமது நம்பிக்கைகள் இது அனைத்தும் சேர்ந்தது தான் நமது கலாசாரம்,

மயிலாடுதுறை மயூரநாதர் கங்கையில் நீராடிய பலன்

மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தின் முன்பாக உள்ள காவிரியின் துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் முழுவதும் நீராடினால், கங்கையில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். கார்த்திகை முதல் நாள் நீராடினாலும் அந்தப் பலனைப் பெறலாம்

திருவெள்ளியங்குடி கருடாழ்வார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது சங்கு, சக்கரம் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

அருள்மிகு பருத்தியூர் ராமர் ஆலயம்,

 திருவாரூர் மாவட்டம் கொடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணி தவம் இருந்த இடம், ராம லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் பரவசமூட்டும் பருத்தியூர் ராம பரிவாரம். ராமாயண சொற்பொழிவுகள் செய்து நூற்றிற்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது.

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில் இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள். இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

கல்வியின் பயன் 6

இது வரை சொன்னவற்றை தொகுத்தால் கல்வி அறிவை தர வேண்டும் அறிவு ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அன்பு அருளை தரவேண்டும் அருள் துறவை தரவேண்டும் துறவு வீடுபேற்றை தரவேண்டும். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உரையில் இருந்து.

கல்வியின் பயன் 5

இப்போதய கல்வியின் முறை பொருளாதாரத்தைக் பெறுவதற்கு மட்டுமே அடிப்படை உந்து சக்தியாய் இருக்கிறது அந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் குறைவு ஆனால் ஒழுக்கத்திலும் அன்பிலும் இருந்து வாழ்ந்தவர்கள் அதிகம் இந்த காலத்தில் கல்வி கற்றவர்கள் மிக, மிக அதிகம் ஆனால் ஒழுக்கத்திலும், அன்பிலும் இருப்பவர்கள் இல்லையென்று சொல்லும் அளவிற்க்கு குறைவு. 

கல்வியின் பயன் 4

நம் முன்னோர்கள் கல்வி என்பது எதை செய்யும் அதை கொண்டு நாம் எதையெல்லாம் செய்யலாம் என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இப்போது நாம் சிந்திக்க வேண்டியது நமது கல்வி முறை நம்மை வீடு பேறு வரை அழைத்துச் செல்லுமா என்று சிந்தித்தால் கேள்விகுறிதான் பதிலாக இருக்கிறது.

கல்வியின் பயன் 3

அடுத்து ஒழுக்கம் அன்பை தரவேண்டும் அடுத்து அன்பு அருளை தரவேண்டும் அடுத்து அருள் துறவை தரவேண்டும், அடுத்து துறவு வீடு பேற்றை தரவேண்டும் இப்படி பார்க்கும் போது சரியான கல்வி நம்மை வீடு பேற்றிற்க்கு அழைத்து செல்லும்

கல்வியின் பயன் 2

அடுத்து அறிவானது ஒழுக்கத்தை தரவேண்டும் ஒழுக்கத்தை தராத அறிவு அறிவே அல்ல ஒரு விதத்தில் பார்த்தால் கல்வி அறிவு தந்து அந்த அறிவு ஒழுக்கத்தை தரவில்லையென்றால் அந்த கல்வியே தேவையில்லை என்ற முடிவுக்குத் தான் வரவேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

கல்வியின் பயன் 1

கல்வியின் பயன் நம்மை எங்கே அழைத்துச் செல்லுமென்று பார்ப்போமேயானால் அது நம்மை முழுமைக்கு அழைத்து செல்வதை காணலாம். மனிதராக பிறந்த நாம் வீடு பேறு அடைவதே முழுமையாகும். அதற்கு அடித்தளமாய் மூலமாய் இருப்பது கல்வியாகும். கல்வி நமக்கு அறிவை தரவேண்டும். அறிவை தருவதே தரவேண்டியதே சரியான கல்வியாகும்.

நான் அந்த சகோதரனைப் போல்

ஒருவரின் விலை உயர்ந்த காரை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல்…

உலகில் குறைகள் இருப்பதால்தான் 2

உலகில் குறைகள் இருப்பதால்தான் 2  ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில்…

உலகில் குறைகள் இருப்பதால்தான் 1 

 ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.  குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.  குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை… நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு  கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.…

இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே 

சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். ‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை. இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார். இரண்டு எலிகளும் பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’ அதற்கு பழைய…

எனக்கு சுமை குறையப்போகிறதா?

 ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான். பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான். கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது. ஏன்  எனக் கேட்டான் எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா?” என்றது.  நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே

விதிமீறல்கள் இயற்கை 5

அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான் கால்கள்  இடறிக் கீழே விழுந்து விடுகிறோம்.. கொசு மாதிரி சாப்பாட்டுக் அலையக் கூடாது.  சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வரவைக்கனும்..

விதிமீறல்கள் இயற்கை 4

மௌனமென்பது சில நேரங்களில் பதிலாக இல்லாமல் கேள்வியாக உள்ளது.. புரிதலென்பது சில நேரங்களில் எதையுமே புரிந்து கொள்ள வேண்டாம் என்று புரிந்து கொள்வது..

விதிமீறல்கள் இயற்கை 3

பயணமென்பது சில நேரங்களில் தேங்கி நின்று ஓய்வெடுப்பது.. விடைபெறுதல் என்பது சில நேரங்களில் அருகிலேயே கொஞ்சம் தூரமாக வாழ்வது..

விதிமீறல்கள் இயற்கை 1

அன்பென்பது சில நேரங்களில் விலகி நின்று ஆதரவு தருவது.. ஆறுதலென்பது சில நேரங்களில் அவர்களாக மீளட்டும் என்று ஓர் இடைவெளி தருவது..

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8

6 – க்குரியவரை 8 – க்குரியவர் பார்த்தால் எதிரி விளங்க மாட்டான். சகோதர வர்க்கம் பாதிப்பு சகோதரரால் நன்மை இல்லை. அன்னியோன்யம் குறையும். 6 – இல் கிரகம் முற்பகுதியில் இருப்பின் மிக்க நலம் ஏற்படும். 6 – க்குடையவர் 12 – இல் நீச, அஸ்தமனம் அடைந்தால், சத்துருக்கள் தானே அழிவர். அல்லது அவரே சத்துருக்களை ஒழிப்பார்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7

6 – க்குரியவர், 6, 8, 12 – இல் இருந்தாலும், நீச்ச அஸ்தமனம் அடைந்தாலும் சத்ருக்கள் இல்லை. சனி, சந்திரன் சேர்க்கையை செவ்வாய் பார்த்தால் வலிப்பு, அபஸ்மாரரோகம் ஏற்படும். சந்திரனுக்கு 6, 8, 12 – ல் குரு இருப்பின் தாயார் சுபீட்சம் இல்லை. ஜாதகனுக்கு காச நோய், மூலம், வயிற்றில் ரோகம் ஏற்படும் இவரை உச்ச சனி பார்த்தால் நோய் போய் விடும்.

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6

1, 2 – க்குடையவர்கள் 8 – இல் நிற்க, சனி பார்க்க மேற்படி பலன். 4, 8 – க்குடையவர்கள் 6 – இல் நிற்க, 12 – க்குடையவர் ராகுவோடு கூடி 4 – இல் நிற்க. லக்கினாதிபதி 12 – இல் நிற்க, 12 – க்குடையவர் 9 – இல் நிற்க, 6, 9 – க்குடையவர்கள் உச்சம் பெற, அரசாங்கத்தில் ஜென்ம தண்டனை அடைவார்கள். 6 – க்குரியவர்கள் பாவருடன்…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5

8 – க்குடையவர் ராகுவோடு கூடி 9 – இல் நிற்க, செவ்வாய், லக்கினாதிபதி லக்கினத்தில் நிற்க, பாபி பார்க்க அம்மை நோயினால் மரணம். லக்கினத்தில் சனி, நிற்க, சந்திரன் பாபி கூடி நிற்க, 6 – க்குடையவர் 9 – இல் நிற்க, குன்ம நோயினால் மரணம். சந்திரனுக்கு 6 – க்குடையவர் 3 – ல் நிற்க, சூரியன், செவ்வாய், பார்க்க நோய், நொடி இல்லாமல் திட சரீரமாய் இருப்பார்கள். 12 – ல்,…

கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4

8 – ல் 4 – க்குடையவர், 3 – க்குடையவர் சூரியன் மூவரும் நிற்க, 4 – க்குடையவர் நீச்சமடைய மார்பு நோயினால் மரணம். லக்னாதிபதி, 4 – க்குடையவர் உச்சமடைய, லக்கினாதிபதி 8 – ல் நிற்க, மேக, ரோகத்தால் மரணம். குருவுடன் 8 – க்குடையவர் கூடி 6 – ல் நிற்க, சனி பார்க்க, கபம், சுரத்தால் மரணம். சுக்கிரனும், லக்கினாதிபதியும் கூடி 8 – ல் நிற்க, 8 –…