சுந்தர யோக சிகிச்சை முறை 118
சீகம் முக்கியமாய் சம்பந்தப்பட்டுள்ளது. தண்ணீர் இதுவரையிலும் எட்டுவதில்லை. ஒரு வேளை எட்டினாலும் தண்ணீர் அங்கேயே நின்று, சதைச் சுவர்கள் மூலம் உள்ளிழுக் கப்படுகிறது. அதிகமாய் வெளிப்போவதில்லை. சில டாக்டர்கள் மேல்சதைப் பயிற்சிகள் விதிக்கிறார்கள். கருவிகளையும் வியாபாரம் செய்கிறார்கள். அல்ப சொல்ப பலன் உண்டாகலாம் ஆனால் இவை வியாதியைத் தடுக்கவும். ஒழிக்கவும், உபயோகப்படா. விளக்கெண்ணெய் வாங்குவதற்குக் காசில்லதவன் ‘ மாலிஷ்க்கும், கருவிக்கும் எங்கே செல்வான்?