ஒரு மாபெரும் கூட்டம் இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று. கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர் எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர் அந்தக் குறிப்புகளைப் படித்து விட்டார். அந்தக் குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக இருந்தது. …