சுந்தர யோக சிகிச்சை முறை 110
இதுவரை வெளிப்பட்ட ஆராய்ச்சியிலருந்து, இப்பெருங்குடலுக்கு வேலை இருக்கிறதென்று அறிகிறோம். சீகத்தைச் சார்ந்து உயரும் குடல்பாகத்தில், இழுக்கப்படாத சில உணவுச் சத்துக்கள் கிரகிக்கபடுகின்றன. மேலும் மாமிச பட்சிணிகளைக் காட்டிலும், மரக்கறியை அண்டி நிற்கும் மனிதனின் குடல் மிகவும் நீண்டிருக்கின்றது. சுமார் ஐந்தடி நீளமுள்ள இந்த பாகத்தில் நமக்கு விளங்காத அவசியம் அமைந்திருக்க வேண்டும் டாக்டர் கீத் ( Dr.KEITH ) துரை இதை அலட்சியம் செய்ய முடியாதென்று கூறுகிறார்.