நஞ்சு
அந்த பெண்ணுக்குத் திருமணமாகி, தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு புது மணப்பெண்ணுக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது. கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான். ஒரு நாள் புது மருமகள் அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர் பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் மருமகள், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள…