உரையாடலில் ஒரு பகுதி 63

எல்லாவற்றையும் வெறுப்பதற்கு பதிலாக, அன்பையும், அரவணைப்பையும் அறியாததால் சமுதாயத்தில் வன்முறையாளர்கள் பெருகிவிட்டனர்.   இன்றைய காலகட்டத்தில் அன்பின் எல்லை சுருங்கி போனதால் உலகில் _கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற வன்முறைகளின் எல்லை பரந்து விரிந்து போய் கொண்டிருக்கிறது.   முன்பெல்லாம் கடிதம் எழுதப்படும் அது வந்து சேர நாட்களாகும் அந்த கடிதத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவோம் அப்படி இருந்த காலத்தில் அன்பு பலமாய் இருந்தது

காலத்தின் நிலை 2

காலத்தை வீணாக்கினால் வாழ்க்கையை அதாவது சரியான வாழ்க்கையை இழந்து விடுவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்துகொள்ளலாம் இப்போ என்ன அவசரம் என்று எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை காலம் நிச்சையம் தள்ளி வைத்துவிடும் யாருக்காகவும் எதற்கு வேண்டியும் காத்திருக்காது காலம். அதனால் கற்றலோ, கற்பித்தலோ, விளையாட்டோ, ஆலயவழிபாடோ, தவமோ, வேலையோ எதுவானாலும் உரிய காலத்தே செய்து பழவோம்

காலத்தின் நிலை 1

காலத்தின் தன்மையை தெரிந்து புரிந்து கொள், காலமே எல்லாம் அதாவது காலமே உன் உயிர் அதை உனக்கோ அல்லது அடுத்தவருக்கோ உபயோகப்படுத்தாமல் நீ வீணாக்கினால் உன்னையே நீ கொலை செய்தவன் ஆகிறாய். காலம் விலை மதிப்பில்லாதது, அதை வீணாக்கி விட்டுவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை பிடிக்க முடியாது. வீணாக்கிவிட்டு அழுது புரண்டு அரற்றினாலும் சென்ற காலம் சென்றது தான் நம்மாள் அதை பிடிக்க முடியாது. அதனால்தான், பெரியவர்கள் நமக்கு சொல்லி கொடுத்தார்கள் காலத்தே பயிர் செய்,…

உலகில் கடினமானது

உலகில் கடினமானது எத்தனையோ உண்டு அதில் சில அல்லது முக்கியமானதில் இது அமையும் முக்கியமாய் இதையும் வைத்துக் கொள்ளலாம்.   1. ரகசியத்தை காத்தல், 2. பிறர் செய்த தவறை மறப்பது, மன்னிப்பது அதாவது நம்மை வஞ்சித்தவரை நம்மை காயப்படுத்தியவரை, 3 ஓய்வு நேரத்தை மிக பயனுள்ள வழியில் கழித்தல். .

கோபம்

கோபம் என்பது உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, சுற்றுபுறம் சார்ந்த பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லாத சூழ்நிலை காரணமாக உண்டாகிறது கோபம் உண்டாக அவரவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் அதில் ஒன்று சிந்திக்காமல் செயல்படுத்தும் அதிர்ப்தி தான் கோபம், மேலும் பிறர் நம்மை தாழ்த்தும் போதும் உண்டாகும் எதிர்வினை  உணர்வே கோபம், எவனால் சிந்தித்து தனது கோபத்தை தனது கட்டுபாட்டில் வைத்து வெற்றி கொள்கிறானோ அவன் தனது வாழ்நாளின் மிக பெரிய எதிரியை வெற்றி கொண்டவன்…

செம்மொழிக்கான பதினோரு தகுதிகள்

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.. 1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள்  4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை   7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி தமிழ்..!

உரையாடலில் ஒரு பகுதி 62

சூன்யமான இந்த விண்வெளியில் இத்தனை நட்சத்திரங்கள் எப்படி தோன்றியது இந்த கேள்விக்கு விஞ்ஞானிகளில் பலவித கருத்துகளை சொன்னாலும் எதுவும் திருப்திகரமாய் இல்லை இயற்கையை சோதிப்பதில் மனிதன் இன்னும் வெற்றி அடையவில்லை காரணம் இயற்கையின் முன் மனிதன் அணுவிலும் அணு அதனால் யானையை கண்ட குருடர்கள் தங்களுக்கு தோன்றியதை சொல்லியது போல் விஞ்ஞானிகள் இயற்கையைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் பார்க்கும்  சூரியன் 1 ஆனால் அண்டவெளியில் இது போல் எத்தனையோ சூரியர்கள் நிலைமை இப்படி இருக்க…

உரையாடலில் ஒரு பகுதி 61

அன்றைய மனிதர்கள் அப்படியில்லையென்றே தோன்றுகிறது.  ஒரு 75 வருடங்களுக்கு  முன்  இருந்த இந்தியர்களின் மனோபாவம் இப்போது உள்ள இந்தியர்களுக்கு இருக்கிறதா நெஞ்சை தொட்டு சொல்லுவதாய் இருந்தால் இல்லையென்ற பதில் தான் வரும் ஏன்? எதனால் நாம் அதை இழந்தோம், இழந்ததும், இழந்து கொண்டிருப்பதும், நமது சுயத்தை என்று நமக்கு ஏன் தெரியவில்லை. அமெரிக்காவைப் பார், ரஷ்யாவை பார் அதை பார் இதை பார் இன்னும் என்னென்னமோ பார் என்று சொல்லி எல்லாவற்றையும் பார்த்து நாம் நம்மை தொலைத்துவிட்டோமே.…

உரையாடலில் ஒரு பகுதி 60

உறவுகளில் ஆகட்டும், நட்பில் ஆகட்டும் நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்து சில நாட்கள் ஒன்றாய் கழித்து விடைபெறும் போது   என்ன சாப்பிட்டோம் எங்கு சுற்றினோம் என்பது அல்ல முக்கியம். மனம் விட்டு எத்தனை பேசினோம் என்பது தான் முக்கியம்  

உரையாடலில் ஒரு பகுதி 59

உதட்டில் புன் சிரிப்பை தவழவிட்டு கொண்டுள்ளோரது துவேஷத்தில் வெந்து விகாரத்தோடு நசிந்து வரும் பந்தங்கள் இந்த உலகில் எத்தனை யாருக்கு தெரியும்? தெரியாவிட்டாலும் இருப்பது என்னவோ நிஜம் தான்.

உரையாடலில் ஒரு பகுதி 58

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனுக்கு மட்டுமே சொந்தமானது அதை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற சுதந்திரம் வேண்டும்.  சில உண்மைகளை எத்தனை தாமதமாக அறிந்து கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை நல்லது, அதுவும் மற்றவரிடம் இருந்து அறிந்து கொள்வதை விட சம்மந்தபட்டவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது ரொம்பவும் நல்லது.

உரையாடலில் ஒரு பகுதி 57

உடலில் ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை விரல் தான் உடலின் கண்களை திறக்க வல்லது.  பாலாடையின் மீது ஊர்ந்து போகும் சிற்றெறும்பின் கால் தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும், வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியே தான் நினைவின் ஊற்று கசிந்து கொண்டே இருக்கும் கண்ணுக்கு தெரியாமல் நினைவில் படறும் அந்த நறுமணத்திற்க்கு ஈடு சொல்ல உலகில் எந்த நறுமண பொருளையும் மனிதன் கண்டறியவில்லை.

உரையாடலில் ஒரு பகுதி 56

இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாக சமைக்க தெரிந்தது தான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. மண்ணும், மண்ணில் இருக்கும் தாதுக்களும் உடலினை என்னென்ன செய்யும் என்பதை அறிந்தாலே உணவு பழக்க வழக்கம் சரியாகிவிடும்.

உரையாடலில் ஒரு பகுதி 55

அறிவாலும், குணத்தாலும் எடுக்க வேண்டிய முடிவை விதிகளாலும், கட்டளைகளாலும் எடுக்க முடியாது மனிதன் எடுக்க வேண்டிய முடிவை சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம். கட்டளைகளால் கட்டியெழுப்பபடுவது தான் அரசாட்சி அதன் உறுப்புகள் அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும் முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதினாலேயே, எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது .எல்லோர் கையிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.

உரையாடலில் ஒரு பகுதி 54

மனித அனுமானங்களுக்கு அப்பால் காலம் இயங்கி கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது மனிதன் பொறி கலங்கி போய்விடுகிறான். வேறு வழி, கதை சொல்லும் போது பெருகக் கூடியது, நினைக்கும் போது திரளக்கூடியது, மறக்க எண்ணும் போது நம்மை கண்டு சிரிக்கக்கூடியது வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலை கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்.

உரையாடலில் ஒரு பகுதி 53 

பேசாமல் இருந்து விட்டால் மறந்து அழிந்து போவது மொழி மட்டுமல்ல உறவுகளும் தான்.  உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் தளர்ந்து இல்லாது போய்விடும் இயற்கையின் நியதி அப்படி தான் இருக்கிறது அதனால் எல்லாவற்றையும் சரியான அளவில் உபயோகிப்போம்.  

உரையாடலில் ஒரு பகுதி 52

பல நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ அதையே அதிகம் நினைக்க வைக்கிறது. இதில் அன்பு கொண்டதோ அல்லது கோபம் கொண்டதோ, ஏமாற்றியதோ அல்லது ஏமாந்ததோ, இரக்கம் கொண்டதோ அல்லது கடுமையாய் இருந்ததோ, இணைந்து  இருந்ததோ அல்லது விலகிப் போனதோ, நம்பி இருந்ததோ அல்லது நம்பாமல் கெட்டதோ இப்படி பலதையும் மனம் மறக்க நினைக்கிறது.  ஆனால் பல சூழ்நிலைகளில் விதி அதிகம் நினைக்க வைக்கிறது.  என்ன கொடுமையடா சாமி.

உரையாடலில் ஒரு பகுதி 51

ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடியாது.  அப்படியே மதிப்பீடு செய்ய முனைந்தாலும் அந்த மனிதனின் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

அதிசயம் நிறைந்த ஆலயங்கள் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும் சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

எது மெச்யூரிட்டி 6

காணும் அனைத்திலும் பிறப்பு ரீதியாக இன ரீதியாக சாதி ரீதியாக மத ரீதியாக மொழி ரீதியாக பிரிவினையைப் பற்றியே முதலில் யோசிக்கும் சிந்தனையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் வெளியேறி கல்வி கற்று முன்னேறி பல பயணங்கள் மேற்கொண்டு பல ஊர்களை அடைந்து பல ஊர்  தண்ணீர் குடித்து பல மனிதர்களைக் கண்டு நம் அனைவருக்கும் நோய்/ வலி/ மகிழ்ச்சி/ மரணம்/ பிரிவு / காதல் ஆகியவை ஒன்றாக இருப்பதை உணர்ந்து வேற்றுமையை மறந்து ஒற்றுமையைப் பற்றி யோசித்தால்…

எது மெச்யூரிட்டி 5

நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்கக்கூடாது என்றும் மாற்றுக் கருத்துகளை பேசுபவரை எதிரி என்று நோக்கும் மனநிலையில் இருந்து நாம் மாறி மாற்றுக் கருத்துகளையும் கனிவோடு செவிமடுத்து அந்த கருத்துகளைப் பேசுபவரையும் அரவணைத்து அதில் உள்ள உண்மையையும் தேவையற்றதையும் வடிகட்டி ஆராய்ந்து ஒன்றாகப் பயணிப்பது தான்  மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 4

நம்மை யார் விமர்சித்தாலும் யார் நம் தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் கடுப்பாகி கண் சிவந்து விமர்சித்தவர்களை கல்கொண்டோ சொல் கொண்டோ தாக்க எண்ணுவதில் இருந்தும் மாறி நம் முன்னேற்றத்தில் நம்மை விமர்சிக்கும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்ந்து ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து நமக்கு நேரெதிர் கருத்துகளையும் மதித்து ஆராய்ந்து அதில் இருந்தும் பாடம் கற்று சுயமுன்னேற்றம் அடைவது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 3

ஒரு தோல்வியில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் ஒரு வெற்றியில் அனைத்தும் வந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஒரு வெற்றிக்குப் பின்னும் தோல்வி உண்டென்றும் ஒரு தோல்விக்குப் பின்னும் வெற்றி உண்டென்றும் உணர்வதில் உள்ளது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 2

ஒருவர் இதுவரை எவ்வளவு பட்டங்கள் பெற்றார் என்பதில் மெய்யான முதிர்ச்சி இருப்பதில்லை மாறாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் வெளியே வாழ்க்கை ஒரு பாடத்தை சர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கிறதே. . அந்த பாடத்தை படித்து வாழ்வு வைக்கும் தேர்வுகளில் வெற்றியோ தோல்வியோ மாறி மாறி அனுபவித்து சேமித்து வைத்திருக்கிறாரே ஒரு அனுபவம் அது மெச்யூரிட்டி

எது மெச்யூரிட்டி 1

மெச்யூரிட்டி என்பது வயதால் மட்டும் வருவதன்று. ஒருவருக்கு வயதாவதால் மட்டுமே அவர் முதிர்ச்சி அடைவதில்லை மாறாக அவர் அன்றாட வாழ்வில் எத்தனை பேரைக் கடந்து வந்திருக்கிறார் அத்தனை பேரும் மற்றும் அவர்களுடைய வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும் இவரது எண்ணங்களிலும் சிந்தனையிலும் என்னென்ன மாற்றங்களைச் செய்தன என்பதில் தான் மெச்யூரிட்டி வருகிறது.

பலவீனத்தை எல்லாம்

பலவீனத்தை எல்லாம் ஒப்பனைகள் அதிகம் பூசி பலமாக மாற்ற வேண்டாம்.. மனமுவந்து ஏற்றுக்கொண்ட பின் அவைகள் தானாகவே பலமாகிவிடும்! அங்கேயே தான் உள்ளன பகல்கள்.. எப்படியும் வந்தே தீரும் இரவுகள்.. அது அது அப்படியே இயங்கட்டும் இயைந்து கொள்ளுங்கள்! ஒடிந்த முருங்கை மரத்தின் கிளை மீண்டும் ஒரு மரமாகும்.. எடுத்து அதே தோட்டத்தில் நட்டு வையுங்கள்!!

தேட வேண்டாம் அவர்களை

விலகியது விலகியதாகவே இருக்கட்டும் விட்டுவிடுங்கள்.. மீண்டும் வந்தால் யார் விரிசல்கள் யாருடையது என்ற போர்கள் எழலாம்! பேசாமல் போன சொற்கள் பேசாமலே தீர்ந்து போகட்டும்.. காலம் தாழ்ந்து வந்த வார்த்தைகள் வெறும் நீராவிகள் நீண்ட நேரம் நிற்காது! சொல்லாமல் கொள்ளாமல் போனவர்கள் உண்மையில் தொலையவில்லை ஒளிந்து கொண்டனர்.. தேட வேண்டாம் அவர்களை வேண்டுமெனில் வந்துவிடுவார்கள்!

உரையாடலில் ஒரு பகுதி 50

அந்த அமைதியில் மனிதன் பழகிவிட்டான் என்றால் நிம்மதி அவனுக்கு என்றும் நிரந்தரம் இல்லாவிட்டால்  எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்பது சாஸ்வதம். ( என்று தேடி அலைவது ) எத்தனை பேர்களால் நான் நானாக எனக்குள் எனக்காக தன் பொருட்டு தானே அமைதியாய் இருக்கும் நிலையை அடைய முடிந்திருக்கிறது. அப்படி எந்த இரைச்சலும் இல்லாமல் _வேறு வெளி எந்த இரைச்சலும் கேட்காமல் ஆடாமல், அசையாமல், ஆனந்தத்தை அமைதியாய் பருகிக் கொண்டிருக்கும் நிலை எத்தனை பேருக்கு வாய்க்கிறது. எத்தனை…

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம்  5

21 சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது. 22 கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது. 23 மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும். 24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க…