வியாழன் 5
குரு உச்சம் பெற்று வர்க்கோத்தமாக இருப்பின் சகல பாக்யங்கள் பெற்று வாழ்வர். குரு ஆட்சி பெற்ற தனுர் லக்னக்காரகர்கள், சூரியனும், செவ்வாயும் 5ல் உள்ளவர்கள். உலகளவில் சாதனையும், ஆன்மீகத்துறையில் சேவைசெய்வர். குரு 10ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் வேதாந்தியாகவும், பேராசிரியராகவும், ஞானவழியில் வாழ்க்கை அமைப்பர். குரு மகர ராசியில் நீச நிலையை பெறுவர். அவர் மகரராசியில் வக்கிரகதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தால் நீசப்பங்கம் ஏற்படும். குருவுடன் தொடர்பு கொண்ட சனி வலுத்திருந்தால் அரசாங்கப்பதவி கிடைக்கும்.