புதன் 5

புதனும், சந்திரனும் பரிவர்த்தனமாகிவிடில் அவர் நினைத்த படிப்பை படிக்க முடியாது.  பட்டப்படிப்பும் ஏற்படாது. புதனுக்கு புதன் 6,க்கு8ல் நின்றிடில் ஆண் குடும்பத்தினரை பெண்ணுக்கு பிடிக்காது. அதேபோல் பெண் குடும்பத்தினரை ஆணுக்கு பிடிக்காது. புதன் சொந்த வீட்டிலோ, உச்சவீட்டிலோ, அதுவும் கேந்திரத்தில் இருப்பின் புத்திரயோகம் ஏற்படும். அதனால் செல்வந்தராகவும், சிறந்த பேச்சாளராகவும், பொதுமக்களிடையே பேரும், புகழும் அடைவர். புதன் நீச்சனாக இருந்தால் வேறு மதம், வேறு இனம், வேறு மொழியைச் சேர்ந்தவர் வாழ்க்கைத் துணையாக அமையும். புதனும், குருவும்…