செவ்வாய் 6
செவ்வாயுடன் தொடர்பு கொண்ட சனி பலம் பெற்றிருந்தால் ஒருவர் தொழில் நுட்பக்கலை வல்லுநராகவும், மெகானிக்கல் இன்சினியராகவும் முடியும். செவ்வாய் துலாத்தில் இருக்கப் பிறந்தவர்கள் லாகிரி வஸ்துக்களில் நாட்டம் செலுத்துவர். சிற்றின்பத்து செலவு செய்வார்கள், கடுமையாக பேசுவார்கள். செவ்வாய் மீனத்தில் இருக்க பிறந்தவர்கள், நல்ல பதவி வகிப்பார்கள், முன்னேற்றம் திருப்தியாக இராது. வெளிநாட்டு வாசமிருக்கும். செவ்வாய் கடகத்தில் இருக்க பிறந்தவர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்பர், உடல் நலம் குறைந்திருக்கும், விவசாயத்துறை லாபம் அளிக்கும்.