முருகனின் வடிவங்கள். 2
குமாரசாமி – கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. சண்முகர் – திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். தாரகாரி – ‘ தாரகாசுரன் ‘ என்னும் அசுரனை அழித்ததால் முருகப் பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார். உலகமாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார். பிரம்மசாஸ்தா – காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில்…