இந்த பெண் .
இனி எதற்கும் ஏன்”என கேள்வி கேக்காதே என்று சொன்னால் …. அதற்கும் … ஏன் என்று தான் கேட்பாள் இந்த பெண் .
இனி எதற்கும் ஏன்”என கேள்வி கேக்காதே என்று சொன்னால் …. அதற்கும் … ஏன் என்று தான் கேட்பாள் இந்த பெண் .
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் … மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை
உங்களை மற்றவர்களுடன் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது என்பது, உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்.
இது உன்னுடைய வாழ்க்கை ஒட்டப்பந்தையம் அல்ல ஒடாதே நில் யோசி பார் ரசி சுவை உணர் பேசு பழகு விரும்பு
கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27 மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல் மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur
வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள் வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள் கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்) மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33 ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8
பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °) சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்
மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை மிகச்சிறிய செல்: விந்து மிகச்சிறிய எலும்பு: காது குருத்தெலும்பு முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம் சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ
பராலிஸிஸ் ( PARALYSIS ) ஊசி எற்றுதலால் சொல்ப குணம் பெற்றவர் சிலர். இவர் பிற்காலத்தில் இந்நோயிலேயே உயிரிழப்பது உலக அனுபவம். போலியோ அல்லது குழந்தை வாதத்திற்கு இன்னும் மருந்து நினைக்கப்படவில்லை. குஷ்டத்தில் சிகிச்சை எல்லாம் பிறருக்குப் பரவாமல் தடுப்பதிலேயே நிற்கின்றது. குஷ்டத் தழும்பில் ஏற்றும் எண்ணெய் முதலிய மருந்து ஊசிகளெல்லாம் நிறத்தை மாற்றும், இடத்தில் மயிர் முளைக்கச் செய்யலாம். ஆனால் உணர்ச்சி வரச்செய்ய சக்தியற்றவை. குணமாகிவிட்டதென்று மனப்பால் குடித்துச் சென்றவர், மனம் கசிந்து, இக்கடுநோய் வட்டியும்,…
டி.பிக்கு ஏ.பி, காற்றூசி ( A.P.INJECTION ) ஸ்ட்றெப்டோமைசின் ஊசி போடுகின்றார்கள். காற்று ஊசி பல கோளாறுகளை உண்டாக்குகின்றது. ஸ்ட்றெப்டோமைசின் ஊசி திருப்தி இல்லை என்பதை நோயாளிகளும், வைத்தியர்களும் ஒப்புக் கொள்ளுவார்கள். இந்த நோயிலிருந்து பிழைத்தவர்கள். அபூர்வமாக இருக்கலாம். சிகிச்சையால் பிழைத்தவரை, நோய், திரும்பித்தாக்காத பேர்கள் எண்ணுவதற்கு அகப்படமாட்டார்கள். டான்சிலிடிஸ், அடினாய்ட்சுக்கு ஆபரேஷன் செய்வார்கள். ஆனால், இவை திரும்பவராதென்று டாக்டர்கள் உறுதி கூறமாட்டார்கள். நோயாளிகள் இவை திரும்பி வந்தவிடுகிறதென. முறையிடுகிறார்கள்.
ஆஸ்த்மாவுக்கு ஏற்பட்டுள்ள மருந்து, அந்த சமயத்திற்கு மட்டும் கபத்தைக் கலைத்து மூச்சுவிட சிறிது எளிதாக்கும். நோய் தீவிரமடைந்தால் இன்ஜெக் ஷன் மருந்துகளும் பயன்படுவதில்லை. டயாபெடிசால் சாகாமலிக்க, தினம் இன்சுலினை எற்றிக் கொண்டே இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு தடவையோ, பல தடவைகளோ ஊசி தேவை. இன்சுலின் நிறுத்தப்பட்டது,என்றால் பழைய நோய் திரும்பவும் முழு வேகத்தில் தாக்க ஆரம்பிக்கும், சிறுநீர் சர்க்கரையையோ, ரத்தச் சர்க்கரையையோ ஒழிப்பதில்லை.
தலையீடு அல்லது பங்களிப்பு என்பது உறவுகளினால் உண்டாகும், கோபம், வெறுப்பு, பயம், ஆசை, வேதனை, வருத்தம் போன்றவைகளே நாம் எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கின்றோம். தனியே நம்மால் இருக்க முடியாது. அதனால் நம்மை பொறுத்தவரை உறவு என்பது இன்றியமையாதது. ஆனால் அது ஒரு விதத்தில் அர்த்தமில்லாதது. காரணம் நம் மனம் துவள்வதும், கலங்குவதும், உறவுகளினாலேயே அதனாலேயே நம்முடைய வாழ்நாளில் சோகமான பகுதி என்பது அதிக அளவு ஆக்கிரமித்து கொண்டுள்ளது.
இந்த சோகங்களில் இருந்து விடுபட மனிதர்கள் ஒவ்வொரு வரும் தனது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டும் அப்படி பார்க்கும் போது வாழ்க்கை என்றால் என்ன என்ற வினாவையும் அதனுடன் நாம் வாழும் தினசரி வாழ்க்கை, பயம், கோபம், இன்பம், இரக்கம், அன்பு மகிழ்ச்சி போன்ற விஷயங்களையும் கவனித்து சிந்திக்க வேண்டும். நாம் சற்று கவனித்தோமானால் நம்முடைய தினசரி வாழ்க்கையில் உறவுகளின் பங்களிப்பு, அல்லது தலையீடு அதிகமாய் இருப்பதை காணலாம்.
இதனுடைய அடி வேரை கண்டு தெளிய வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு ஏனோ தோன்றுவது இல்லை எல்லாவற்றிலும் வளர்ச்சி அடைந்து விட்டோம் என்ற நினைவில், நிலையில், மனிதன் ஏனோ தன் வாழ்க்கையை வாழும் நியதியை அறிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை எத்தனையோ வெற்றிகளை, வளர்ச்சிகளை உருவாக்கி கொண்டோம் என்ற ஆணவத்தின் பிடியில் சிக்கியுள்ள மனித குலம், பயம், ஆசை, இன்பம் போன்ற நிலைகளை புரிந்து கொள்ளாமல் அதனுடனேயே தன்னுடைய வாழ்நாட்களை கழிப்பது சோகத்திலும் சோகம்.
மனிதன் இன்றைய கால கட்டத்தில் அவனுடைய வாழ்வில் எத்தனையோ விதமான, விநோதமான கஷ்டங்கள், போராட்டங்கள், சோகங்கள், குழப்பங்கள், இன்பங்கள், வெற்றிகள், தீர்வுகள், நியதிகள் என்ற பல பொறிகளில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை நாம் பார்க்கின்றோம் இது ஏன்? எதனால்? இப்படி என்று சிந்தித்து ஆராய மனமில்லா மனநிலையில் வாழ்ந்து பழகிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்
உலகிலேயே மிக அற்புதமாக சிரிக்க கூடியவர்கள் ஃபிஜி தீவில் வசிப்பவர்கள்தானாம், டாக்டர் மாக்ஸ் லூசர் எழுதியிருக்கிறார். அவர்களின் சிரிப்பு மெதுவாக தொடங்கி முகம் முழுவதும் மலர்ந்து அடுத்தவர் அதை உணர்ந்து கொள்ளும் வரை நீடித்து அடுத்தவர் அதை உணர்ந்தவுடன் எரியும் தீப சுடர் போல் மெதுவாக கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போகுமாம் சரி சிரிப்பைப்பற்றி தெரிந்து கொண்டாயிற்று நாமும் இனி இப்படி சிரிக்க முயற்சி செய்து வெற்றி பெறுவோம்.
பாரதியின் வாக்கான, பள்ளிதலமனதைத்தும் கோயில் செய்வோம் என்பதன் பொருளே இதுதான், கல்வி அறிவின் வாயிலாக ஞானத்தை அடைய வேண்டும் என்பதே நியாயம் என்பது முத்திரை இடப்பட்ட ஒரே மாதிரியான அளவு கோலல்ல. அது மனிதருக்கு மனிதர் காலத்திற்கு காலம் விஷயங்களுக்கு விஷயம் மாறுபடுகிறது. இதை புரியாமல் ஒரே முத்திரை கொண்ட அளவு கோலை கொண்டு அளக்கும் போது நியாயமே சில சமயங்களில் அநியாயமாகிவிடுகிறது. அப்போது ஊன்றி கவனித்தால், அநியாயம், நியாயமாக உலா வருவதை காணலாம்.
கல்வியின் இலட்சியம், ஞானம் ஆகும் அதற்கு அறிவு உபகரணமாகும் நமது கல்வி கூடங்கள் வெறும் அறிவு அபிவிருத்திக் கூடங்கள் ஆகிவிட்டன ஞானத்திற்கும், அவற்றிக்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது. இவற்றிற்கு காரணம் நாம் கொண்டுள்ள அந்நிய மோகம் அதனால் நிகழ்ந்த பயன் கல்வி கூடங்கள் மனிதர்களை உருவாக்காமல் எழுத்தறிவு பெற்ற மந்தைகளை உருவாக்குகின்றன.
எவனொருவன் எப்போதும் எல்லா விஷயங்களிலும் தனக்குள்ளாகவே எதிரும், புதிருமாக நின்று விவாதித்து பழகியிருக்கின்றானோ அவன் எந்த நியாயமான கருத்துக்கும், நியாயமான உணர்வுக்கும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் தோள் கொடுப்பான் அந்த உரம் அவனுக்கு அவனுள் நடக்கும் விவாதமே தருகிறது. அது விவேகமாக அவனில் வெளிப்படும். இதை கல்வி தராது தர்மத்திலும், சத்தியத்திலும் உள்ள தீவிர நம்பிக்கையே தரும்.
நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஒருவனை விலக்கி ஒரு மனிதனை மயங்க செய்து அவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தீமை தருவதே போதை அது கடவுள் பக்தியானாலும் சரி, கள்ளின் போதையானாலும் சரி இரண்டும் தவறே. கடவுள் பக்தியையும் கள்ளையும் ஒப்பிடலாமோ என்ற வினா வரலாம் அதற்கு பதில் போதை எது தந்தாலும் தவறுதான் என்பதே பதில்.
இறைவனின் திருவிளையாடல்களை என்னவென்று சொல்லுவது அதை சாதாரண மதிகொண்டு அறிய முடியுமா இல்லை அளக்கத்தான் முடியுமா? கடவுள் மனிதனாக அவதாரமாகலாம் என்றால் மனிதன் கடவுளாக முடியாதா என்ன? சரியாக அல்லது ஒரு மாதிரி சிந்தித்து பார்த்தால் அந்த காலத்தில் அரசர்கள் தெய்வத்திற்கு சமம், அரசன் தெய்வமே எனும் கொள்கை இருந்தது இப்போது அதிபர்கள், முதல் பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள் வரை உலகில் உள்ள மனிதன் கடவுளாய் ஆனவன் தான் என்றே தோன்றுகிறது.
நம்முடைய மக்களிடம் உள்ள ஒரு விஷயம் அதாவது ஆஸ்திகர்களிடம் அதிகமாய் உள்ளது என்னவென்றால் தனக்கு இருக்கும் இறை நம்பிக்கையை அலங்கார, ஆடம்பரத்தோடு காட்டி பகிரங்கப்படுத்திக் கொள்ளும் பக்த சிகாமணிகளுக்கு அடி பணிந்து, அடிபணிந்து அடிமையாய் இருக்க எத்தனை மக்கள் நினைத்தாலே வியப்பாயும், ஆச்சர்யமாயும் இருக்கிறது. பக்தி இவர்களுக்கு தெளிவை தருவதற்கு பதில் மயக்கத்தை அல்லவா தந்திருக்கிறது. அதனால் தானே இறைவனை அறிய முடியாத அடைய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த மனம் தான் உள்ளதை உள்ளபடி எற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தரும் அந்த பக்குவ நிலையே ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டிய சொத்து. அந்த சொத்தை அடையவே அவனுடைய கல்வி அவனுக்கு பயன்பட வேண்டும். அந்த பக்குவத்தை தர முடியாத கல்வியினால் பயன் இல்லை.
அமைதி அடைந்த மனம் கோபம் கொள்ளாது கோபமில்லாத மனம், சாந்தமாய் இருக்கும் சாந்தம் கொண்ட மனம் திருப்தி உடையதாய் இருக்கும் எதிலும் திருப்தி அடைந்த மனம் தான் புரிந்து கொண்டதை பிறர் புரிந்து கொள்ளாவில்லையென்றாலும் கோபப்படாது.
ஆதிக்கத்திற்கு காரணம் உரிமை அந்த உரிமைக்கு காரணம் நம்முடையது என்ற ஆழமான எண்ணத்தினால் உண்டானது. நம்முடையது அல்ல எதுவும் இந்த உலகில் என்கிற எண்ணம் வந்துவிட்டாலே மனம் அமைதி அடைந்து விடும்
புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல் என்பது பொருள்களைப் பற்றிய விஷயங்கள் மட்டுமல்ல அதையும் தாண்டி உள்ள மனித மனதின் தன்மைகளை, எண்ணங்களை புரிந்து கொள்ளுதலே உண்மையில் புரிந்து கொள்ளுதல் ஆகும் அது சாத்தியப்பட்டுவிட்டால் நாம் பிறரிடம் செலுத்தும் ஆதிக்கம் அற்று போய்விடும்
கோபம் நிறைந்த இடம் ஒரு காலத்தில் வன்முறையாய் ஏதாவது ஷணத்தில் மாறும் அது மனிதனின் சுகத்தை, அமைதியை, சந்தோஷத்தை, திருப்தியை அழித்து விடும் அப்படியான பின்னால் மனித குலத்திற்க்கு என்ன பெருமை கிட்டிவிட போகிறது மனித குலம் வளர்ந்து இருக்கிறது என்று சொல்வதில் என்ன உண்மை இருக்க போகிறது.
இப்படி விஷயத்தை புரிந்து கொள்ளாவிட்டால் என்ன ஆகும். முதலில், புரிந்து கொண்டவனுக்கு புரிந்து கொள்ளாதவன் மீது கோபம் வரும். இது தந்தை, மகன், கணவன், மனைவி முதல் பணி செய்யும் இடங்கள், கல்வி சாலைகள், அரசியல் போன்ற எல்லாவற்றிலும் இது நுழையும்
மனிதர்களாகிய நாம் ஒரு முக்கியமான விஷயத்தை ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். அது என்னவென்றால், நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டதற்க்கு எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அவ்வளவு நியாயம் அந்த விஷயத்தை புரிந்து கொள்ளாதவனுக்கும் உண்டு என்பதைத் தான் நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டியது.
பகை காட்டினில் விளையும் நெருப்பு போல பரவிக் கொண்டும் ஆற்றலை பெருக்கிக்கொண்டும் எல்லாவற்றையும் அழித்துக் கொண்டும் இருக்கும்.
பல சமயங்களில் காதல் என்பது தண்ணீர் இல்லாத குளத்தில் குளித்து வருபவருக்கு தலை துவட்ட துண்டு கொடுக்க காதலனிடம் சொல்லும் இதை புரிந்து கொள்ள நிச்சயம் காதலித்திருக்க வேண்டும்.