அஞ்சாமல் முன்னேறுக
மோகமாகிய முதலையின் வாயில், மக்கள்எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் அந்தோ இதயத்தைப் பிளக்கக் கூடியஅவர்களின் சோகக் குரலை கேளுங்கள். முன்னேறிச் செல்லுங்கள்*கட்டுண்டுகிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும், எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்டகிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும், ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள் அஞ்சாதே அஞ்சாதே * என்று வேதாந்த முரசு முழங்கிக்கொண்டிருப்பதைக் கேளுங்கள்.