சுந்தர யோக சிகிச்சை முறை 89
பிணிகளும், சிகிச்சையும். சிகிச்சையின் பிரிவுகள். யோக முறைகளால், பிணியைப் போக்கும் வழிக்கு யோக சிகிச்சை என்று பெயர் பலரும் இதைக்கையாளலாம் இவர்கள் உபயோகிப்பது பெரும்பாலும் யோகாசனம் ஒன்றே. பிராணயாமத்தையும் இன்னும் சிலர் சேர்த்துக் கொள்கிறார்கள். உணவையும், ஒழுக்கத்தையும் அநேகமாய் மறந்து விடுகின்றனர். யோகப் பயிற்சிக்கு அடுத்தபடியாய் சிகிச்சையின் முக்கிய அம்சமாக உணவு ஒழுக்கத்தையும் பிணைத்து அளிப்பதில்லை. பின் விளக்கப்படும் மற்ற தொகுதிகளை அறவே மறுக்கின்றனர்.