சுந்தர யோக சிகிச்சை முறை 86
கடவுளே இல்லை என்போருக்கும் ஒரு வழி சொல்லுகிறேன். துதிக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி இருதய ஸ்தானத்தில் நிறுத்தி தானே சத்திய, நித்திய ஆனந்தம் என்று எண்ணி லயிக்கட்டும். நோய் தடுத்து ஆரோக்கிய சுகத்தில் வாழ ஒரு உதாரண திட்டம் கொடுக்கிறேன். காலை எழுதல் 4 அல்லது 4-30 மணி மலஜலப் போக்கு, நித்தியக் கடன் அரை மணி நேரம். ஆசனம், பிராணயாமம் 5லிருந்து 6 மணி வரை ஸ்னானம், துதி 6.30லிருந்து 7.00…