வஜ்ர முத்திரை :

 நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் மடக்கி கட்டை விரலை நடுவிரல் நகத்தின் அருகே வைக்கவேண்டும். ஆட்காட்டி விரல் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.  பலன்கள் :- உடல் வஜ்ரம்போல் பலம்பெரும். சோர்வு,மயக்கம் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலம்பெரும். கல்லீரல்,மண்ணீரல் ஆற்றலை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை அடையும். பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்

ஆதி முத்திரை:-

பெருவிரலை மடக்கி சுண்டுவிரலின் கடைசி ரேகையை தொடுமாறு வைத்து மற்ற நான்கு விரல்களால் மூடிக்கொள்ள வேண்டும். இதுவே ஆதி முத்திரை எனப்படும். தாயின் கருவில் இருக்கும் குழந்தை இவ்வாறு கைகளை மூடியபடி இம்முத்திரை போன்று இருப்பதால் ஆதி முத்திரை என அழைக்கப்படுகின்றது. பலன்கள்  1.கண், காது, பல் வலிகளை போக்கும். 2.மனக் குழப்பம், அதிர்ச்சி, படபடப்பு ஆகியவற்றை சரிசெய்யும். 3.தேவையற்ற கவலை பயம் ஆகியவற்றைப் போக்கும். 4.சுவாசம் மூச்சுத்தினறல் ஆகியவற்றை சீர்படுத்தும். 5.தீய எண்ணங்களை போக்கி மனதை…

கருட முத்திரை:-

இடதுகை பெருவிரலையும் வலதுகை பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பலன்கள்:- 1.உயிர் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும். 2.ஞாபகமறதியைப் போக்கி நினைவாற்றல் பெருகும். 3.பார்வைத் திறனும் கேட்கும் திறனும் அதிகரிக்கும். 4.கோபம்,வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகிய தீய குணங்கள் மறையும். 5.நரம்பு மண்டலம் உறுதியடையும். இம்முத்திரையை 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.…

சுத்த முத்திரை:-

கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது ரேகையை ஒட்டி மேலே பக்கவாட்டில் தொட வேண்டும். சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் செய்தால் அதிகமான பலன் கிடைக்கும். எளிய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு இம்முத்திரை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். பலன்கள் :- உடலில் உள்ள எல்லா விதமான நச்சுப்பொருள்களும் வெளியேற்றப்படும். உடல்வலி, மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமடையும். .நோய்கள் குணமாகும் உடல் புத்துணர்ச்சி…

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்

மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது…….., அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள்,…

சந்திரன் 12

சந்திரனுடன் ராகுவோ, கேதுவோ கூடி இருப்பின் ஜாதகரின் பேச்சுக்கு மதிப்பு இராது. சந்திரனுக்கு கேந்திர திரகோணங்களில் குரு, சுக்கிரன், சனி நின்றால் யோகங்கள் ஏற்படும். சந்திரன், சுக்கிரன் சமசப்தமாக இருப்பின், திருமணம் காலதாமதமாவதோ, மணவாழ்வும் சிறப்பாக அமையாது. சந்திரன், சுக்கிரன் ஒரே ராசியில் இருப்பின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சந்திரா லக்னம், லக்னத்திற்கு, ஐந்து, ஏழாம் அதிபதிகள் இணைந்து இருப்பினும் ஒன்றுக்கொன்று பார்வைபெறினும், அம்சத்தில் இணைந்தாலும் திருமண வாழ்வில் பிரிவினைத்தரும், பாவிகளின் பார்வை ஏற்படில் விவகாரத்தைத்…

சந்திரன் 11

சந்திரன் தனஸ்தானத்தில் இருந்தாலும், பார்த்தாலும் அந்த ஜாதகி ஏழ்மையானவள். சந்திரன் பெண்ணின் ஜாதகத்தில் 3,4,5,7,8,9,10ல் இருந்து குரு பார்வை பெற்றால் சகல மங்களங்களையும் பெற்று சுபிட்சம் அடைவாள். சந்திரனும், சனியும் கூடி 7மிடத்திலிருந்தால் இரண்டாம் தாரம் அல்லது இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடும். சந்திரனுக்கு பத்தில் குரு இருந்தால் அமலாயோகம் என்று பெயர்.  இவர் மத்திய வயதில் பாக்கியம் அடைவார்.  நித்திய தர்மத்துடன் கூடியவராக இருப்பார்.  பல தேசங்களில் பிரசித்தி அடைவார்.

சந்திரன் 10

சந்திரன் 9ம் வீட்டில் இருந்தால் அறிவாற்றல், கல்விமான், படிப்பில் ஆர்வம் இருந்த வண்ணம் இருக்கும். சந்திரன் 12ல் இருந்தால் அயல்நாட்டுக்குச் சென்று படிக்கும் தகுதி ஏற்படும் பேச்சு மென்மையாக இருக்கும். சந்திரன் லக்னத்திற்கு 11ம் இடத்தில் இருந்து புதனும், சுக்கிரனும் 7ல் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஐஸ்வர்யத்தையும் சுகபோகங்களையும் அடைவர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து சுக்கிரனும், புதனும், 3,4,5,7,8,9,10ல் இருந்து பலமும் பெற்றால் அந்த ஜாதகி மிகவும் சுபிட்சமாக அந்தஸ்து உடையவளாவாள். சந்திரன் நீசமாக விருச்சிகத்தில் உதித்தவர்களுக்கு…

திருக்காரவாசல்

 திருக்காரவாசல் என்ற திருத்தலம்.திருவாரூர் அருகே உள்ளது, இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.

சூரியன் வழிபடும் சிவன் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது.

பல கனவுகளோடு

பல கனவுகளோடு வாழ நினைத்த வாழ்க்கை கடைசியில் ஒரு கனவாகவே கடந்து போகிறது வாழ்க்கையில் அழிக்க முடியாத பக்கங்கள் நிறைய உண்டு அதில் அன்பானவர்களின் நினைவுகளும் கூட

உங்களின் தேவைக்காக

உங்களின் தேவைக்காக மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்.   தனக்குத் தொடர்பில்லாத செய்தியை அறிய விரும்புதல் அதை மற்றவர்களிடம் கூறுதல் ஆகியன மோசமான மனிதர்களின் செயற்பாடுகள்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 10

உபநிஷதங்களின் உபதேசத்திற்குறைவிடம் உண்மை.  உண்மையாவது சூது இல்லாமையும் வாக்கிலும் மனதிலும் காயத்திலும் கபடமில்லாமையுமாகும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 9

கனவில் பெற்ற மந்திர உபதேசம் நனவில் உண்மையாகின்றது, கனவில் கிடைத்த நல்லாசியால் காலையில் விழித்துக் கொண்டபின் விரும்பிய பொருள் கிட்டுதலும் காணப்படுகின்றது, ஆகையால் பொய்மையினின்றுங்கூட மெய்மை முளைக்கலாம் என்பது இதனால் அறியப்படும்.

ஸ்ரீ சங்கரரின் வாக்கு 8

மூன்று உலகங்களிலும் ஒவ்வொருவனும், சுகத்தையடையவே பாடுபடுகிறான்.  துக்கத்திற்காக அன்று, துக்கத்தின் காரணம் நீங்கினால் சுகம் வரும். துக்கத்திற்குக் காரணங்கள் , இரண்டு, ஒன்று உடலில் நான் என்ற அபிமானம், இரண்டு, உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது என்ற அபிமானம்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 2

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி இதனை நன்கு உணர்ந்த நோய்வாய்பட்டவர்கள் அல்லது உடல் பலவீனமுடையவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி தேவையான சிகிச்சைகளை செய்து கொண்டு உடலை ஆரோக்கிய முறையில் பேணுவார்கள் ஆனால் உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்கள் உடலைப் பற்றி சிந்திக்காமல் அதற்க்கு முக்கியத்துவம் தராமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். அதனால் உடல் நலம் சரியில்லாமல் ஆக அவர்களே காரணம் ஆவார்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 1

 தாழ்வு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்ளாமல் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சந்தேகங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல் எளிமையாக மகிழ்ச்சிகரமாக இயல்பாக வாழுங்கள் யாரோ சிலர் அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை ஏமாற்றியிருந்தாலும் அதனால் பாதிப்படையாமல் உங்கள் மனதை இயல்பான வாழ்க்கையில் செலுத்தி சந்தோஷமாய் வாழ்க்கையை தொடருங்கள்.  உங்களுடைய பலவீனங்கள் குறைபாடுகளை நீங்கள் உணரத் தொடங்கினால் அவற்றை ஒரு போதும் மறவாது இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி இதை உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வோம்.

ஆதி. 12

ஜீவனில் உயிர் உண்டு அஜீவனில் உயிர் இல்லை இந்த உயிரானது ஜடபொருளுடன் இணையாத பொழுது பூரண அறிவுடன் விளங்குகிறது.  நம்முடைய பூரண அறிவுக்கு தடையாய் இருப்பவை புலன்களும், பொறிகளும் தான். அதிலிருந்து விடுதலை அடைந்து விட்டால் பூரண அறிவு சித்திக்கும் அதாவது ஞானம் உண்டாகும் லோகாதாய வாதிகள், பிரத்தியட்சத்தை மட்டுமே ஏற்கிறார்கள்.  யூகத்தை ஏற்பதில்லை சமண வாதிகள், பிரத்தியட்சம், யூகம் இரண்டையும் ஏற்கிறார்கள்.  அனுபவ வாக்கை ஏற்பதில்லை. அதனால் இவர்கள் வேதங்களை ஏற்பதில்லை.

கருத்து மட்டுமல்ல, , காரியமாற்றவும் வேண்டும்

ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தையும் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்கையில் நான் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒருபாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடையமேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

மறைந்திருக்கும் அழுகையும் சிரிப்பும்

மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும், புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமேவேடிக்கையும், விளையாட்டும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் உண்மையில்அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது. இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் , துயரும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.

நமக்குத் தேவை அன்பும் பொறுமையும்

அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத்தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையாகும். எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். இந்த உண்மை இம்மை மறுமையாகியஇரண்டு உலகங்களுக்கும் பொருந்தும். நன்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணுறு சதவீதம் இறந்து போனவர்கள். அவர்கள் பிசாசுகள்தாம். எனது அருமைக் குழந்தைகளே, அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது.

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை  சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், தானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்.

மனதில் இறங்காம‍ல்

மனதில் இறங்காம‍ல் வெறும் எண்ணங்களாகவே நின்றுவிடும் தத்துவங்களும் நூலகங்களில் படிக்காமல் விடப்படும் புத்தகங்களும் ஒன்றுதான்.

தற்போது மத சந்தையில்

தற்போது மத சந்தையில் அழகிய புறத் தோற்றம் கொண்ட எதற்கும் பயன்படாத பொருட்கள் இப்போது துன்பத்தை கண்டு வேகமாக ஓடும் மக்களுக்கு பரிசு பொருட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது.

பிரார்த்தனை

பிரார்த்தனை இதயத்தால் நடைபெற வேண்டிய ஒன்று அறிவிலோ, புத்தியிலோ நடைபெற வேண்டிய செயல் அல்ல. கோயிலில் இருப்பது என்ன சிலையா? தெய்வமா கல் என்றால் பிரார்த்திக்க முடியாது. தெய்வம் என்றால் நெக்குருகி பிரார்த்திக்காமல் இருக்க முடியாது உண்மையில் பிரார்த்தனை என்பது அன்பில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் கண்ணதாசன் சொன்னது போல, கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும் அன்பில்லாத பிரார்த்தனை உயிரற்ற உடல்,

துன்பத்தை கண்டு ஓடுபவன்

வாழ்க்கையில் துன்பத்தை கண்டு ஓடுபவன் குருட்டு நம்பிக்கைகளில் தன்னை இழக்கிறான். அந்த குருட்டு நம்பிக்கைகளில் புகலிடம் தேடுகிறான். இதை போலி மதவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி மதவாதிகள் என்றால் தன்னையும் அறியாமல் தன்னை அண்டி வருபவர்களையும் தன்னை அறிய விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள்.  

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர்

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தூணின் தென்பக்கத்தில் அரை சந்திர வடிவில் 1 முதல் 6 வரை மற்றும் 6 முதல் 12 வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டும்போது, குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போதைய மணி ஆகும்.

பெருமாள் கோவில்களில்

பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னிதி இருப்பதில்லை. ஆனால், தருமபுரியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி எனும் ஊரில் அமைந்திருக்கும் அபீஷ்ட வரதராஜர் கோவிலில் நவக்கிரகங்கள் உள்ளன. அதோடு அந்த நவக்கிரகங்கள் பெண் வடிவில் காட்சி தருவதும் ஆச்சரியமான ஒன்றாகும்.  

ரத்தம் பற்றிய தகவல்கள் 1

 ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது⁉️ ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபினின் பணி என்ன⁉ ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை + சக்தி எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை ஏற்படும். ரத்த சிவப்பு அணுக்களின் பயன் என்ன  ? ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின்…

ரத்தத்தில் உள்ள பொருட்கள்

1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை⁉️ ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. 2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது⁉️ எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் ஏற்படும். எலும்பு மஜ்ஜை தேவைக்கு உணவிலிருந்து கல்லீரல் வழியாக சத்துக்களை ஏற்ப மண்ணீரலும் கிட்னியும் சேர்ந்து ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் .

இராமாயணம் – சன்மார்க்க விளக்கம்

சுத்த அறிவு இராமனாகவும் அறிவின் சத்தி சீதையாகவும் பத்து திசைகளிலும் அலையக்கூடிய மனமே இராவணனாகவும் மாரீசன் என்பது வஞ்சகமாகிய உலக வாழ்வாகவும் அறிவு மாரீசன் பின் செல்ல மனமாகிய இராவணன் அறிவின் சத்தியாகிய சீதையை கவர்ந்து சோகம் என்னுமிடத்தில் பிரணவத்தில் சிறை வைத்து விடுகின்றது அறிவானது ” வாசி” யாகிய அனுமன் துணை கொண்டு பிரணவத்தை அடைந்து கோதண்டமாகிய பிரணவத்தை வளைத்து அதிலிருந்து சிவவொளியை வீசச் செய்து மனதை அழித்து அறிவின் சத்தியை மீட்டது என்பதையே இராமாயணமாகச்…