சந்தோஷம் என்பது 33

அமைதி எனும் நிலையை அடைய மனிதன் தனக்கு தானே சுய பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும் என்ற தீர்வு வந்த பின் அந்த சுய பரிசோதனையை எங்கிருந்து, எப்படி, எதைக் கொண்டு ஆரம்பிப்பது. சுய பரிசோதனை என்றால் உள்ளதை உள்ளபடி அறிதல் அதன் பின் அதை ஏற்றுக் கொள்ளல் பின் அதை அதை முழுமையாய் கைக்கொள்ளல்.

உன் வினை உன்னைச் சுடும்

பகை, பொறாமை ஆகியவற்றை  நீ  வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும்அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது ஒருமுறை நீ அவற்றை இயங்கச்செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தீய செயல்களைச் செய்வதிலிருந்து  எப்போதும் விலகியிரு.