சுந்தர யோக சிகிச்சை முறை 59
ஹிதம் — நித்திரை செய்யும் விதம் ஆரோக்கியத்தையும் உடல் மனத்திற்கு நன்மை விளைவிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று மணி நேரம் பின்பும், சூர்யோதயத்திற்கு இரண்டு மூன்று மணிக்கு முன்பும் ஏற்படும் ஹிதம் – யுக்தம். மேத்யம் — சுத்தமான உறக்கம், கனவு, சினிமாப் படக்காட்சி போல் இல்லாமல் உண்மையான கேவலம், சுத்த சுழுத்தி ஏற்படவேண்டும். சுத்தமான படுக்கையில் தூய எண்ணங்களை மனத்தில் நினைத்து உறங்க வேண்டும். இத்தகைய நித்திரையே மேத்யம் – யுக்தம். விழிப்பு– மிதம்…