சுந்தர யோக சிகிச்சை முறை 57
உணவு — மிதம் — மிதமாக தேவைக்குகந்தவாறு உண்ண வேண்டும். ஹிதம் — உடலுக்குகந்தவாறு இருக்க வேண்டும். மேத்யம் — சுத்தமானதாக, உன்னதம் பெற்றதாக சத்துள்ளதாக இருக்கவேண்டும். ஓய்வு — மிதம் — அமிதமான ஓய்வு சோம்பலாகும். ஹிதம் –நன்மை தரக்கூடியதாக இருக்கவேண்டும். ஓய்வு சங்கம், இடம் தன்மை என்பவைகளால் பாதிக்கப்படும். சினிமா, டிராமா கொட்டகை, சூதாடும் இடம், சாக்கடை முதலிய அசுத்த நிலம், உகந்த ஆட்டம், கலை, கானம் சம்பந்தமற்றவையே ஹிதம் ஓய்வாகாது. மேத்யம் —…