கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 35
புதன் 2 – ல் நிற்க, செவ்வாய் திரிகோணமடைய, சுக்கிரன் ஆட்சி பெற்று நிற்க, சந்திரன் நட்பில் நிற்க, குரு 9 – ல் இருந்து பார்க்க, சூரியன் லக்கினத்தில் நிற்க, உயர்ந்த காவிய நூல் படைப்பார். குரு திரிகோணமேரி, சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் லக்கினத்தைப் பார்க்க, சனி லக்கின கேந்திரமடைய அழியாத கீர்த்தி, காவியம் படைப்பார்.