ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 13
(மாயாப்பிரபஞ்சத்திற்கு ) வித்தாகிய அஞ்ஞானம் இல்லையென்ற நிச்சயத்தையடைந்தவனும், ஜீவனும், பிரம்மமும் ஒன்றே என்பதை அறிந்தவனும் எங்ஙனம் பிறவியை அடைவான். ஆத்மா என்பது ஒருவருக்கும் ஒரு காலத்தும் தெரியாத ஒரு பொருளோ அல்லது கொள்ளத்தக்கதோ, தள்ளத்தக்கதோ ஆகாது.