அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 50
மரண குறி ….. தெற்கு திசையாய் தைலபிந்து பரவினால் சிலநாளில் மரணம் சம்பவிக்கும் அல்லது மீளான் என்று அறியவும். சுக குறி …… மேற்கு, வடக்கு திசையில் தயிலபிந்து பரவினால் ஆரோக்கியம், என்று அறியவும். மாத மரண குறி …… ஈசான்ய மூலையாய் தயிலபிந்து பரவினால் ஒருமாதத்தில் எமனைப் பார்ப்பான் என்று அறியவும். மரண குறி …… நிருருதி மூலைலும், வாயுமூலையிலும் தயில பிந்து பரவுதலால் மரணம் சம்பவிக்கும் என்று அறியவும்.