ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 8
விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மாறுபாடுகளை உடைய சித்த விருத்தியைப் பிரகாசப்படுத்திக் கொண்டு எங்கும் நிறைந்ததாயும் எல்லா உயிர்களிலும் ஒன்றாயுமிருக்கும் ஆத்மா அனைத்திற்கும் சாக்ஷியாயுளது. ஆத்மா கண்டனுபவிக்கப்பட்டால் இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன. சந்தேகங்களெல்லாம் ஒழிகின்றன. கருமங்களெல்லாம் நாசமடைகின்றன என்று உபநிஷதம் கூறுகிறது.