யாருக்கு எங்கே பலம்? 4
அணியான ஜென்மம், உயிரான நாதன், அழகான கேந்திரமத்திலே -விரிவான ஆயுள் வெகுவாய் உயர்ந்து கெம்பீரனாவன் குயிலே! மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் எந்த ராசி ஜென்ம லக்கினமாக அமைந்த போதிலும் லக்கினாதிபதி லக்கின கேந்திரத்தில் அமர்ந்திருப்பது எல்லா வகையிலான யோகங்களுக்கும் சூட்டிய யோக லட்சணமாகும். இவர்களுக்கு ஆயுளுக்கு குறைவில்லை. விரிவான ஆயுள் ஏற்படுவதுடன் கெம்பீரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்பது விதியாகும். ஆதிபத்தியத்தில் பாதகாதிபத்தியம் பெற்று பாபக்கிரகங்கள் பகை நீச்சம் வீடுகளில் அமர்ந்து கேந்திரம் பெற்று அல்லது…