யாருக்கு எங்கே பலம்? 1
கொடியோர்கள் கேந்திரத்தில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களைத் தருவார்கள் என்பதும் சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில் அமர்ந்திருந்தால் சுப யோகத்தைச் செய்வார்கள் என்பதும் பொது விதி. கேந்திரம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,4,7,10. திரிகோணம் என்பது ஜன்ம லக்கினம் முதலாக 1,5,9.ஆகும். சூரியன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் தசம கேந்திரத்தில் பூரண பலம் பெறுகிறார்கள். இப்படியாக பத்தாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். இவர்களுக்கு படிப்பும் நல்ல விதமாக…