அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 46

அசாத்திய தயிலபிந்து உருவம் ….. மூத்திரத்தில் விட்ட தயிலபிந்துவானது ஆமையைப் போலும், நகத்தடி கலப்பை, எருது, நரி, ஒட்டகம், பன்னி இவைகளின் உருவம் போலும் தோணுமாகில் ரோகமானது அசாத்தியமென்றும் அறிய வேண்டியது. மரண கால தயிலபிந்து ரூபம் …… ஆயுதங்கள், கத்தி, வில்லு, கேடயம், உலக்கை, சூலம், கதை முதலிய உருவமாக தோணுமாகில் சந்தேகமின்றி அந்த ரோகி எமபுரத்திற்கேகுவான்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 6

சுஷோல்கர் ஆதித்யர் கருடன் தன் தாய் விநதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாகும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழி பட்ட சூரிய பகவானை ‘சுஷோல்கர் ஆதித்யர்’ என்று அழைக்கின்றனர். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னிதி உள்ளது.

சுந்தர யோக சிகிச்சை முறை 40

சதைக் கூட்டங்கள் உழைத்தே உயிர், வீரியம் பெறவேண்டும். உழைக்காத சதைகள் மெலிந்து விடும் அல்லது உளைச் சதையாகப் பயனின்றி ஜீவனுக்கு அவசியமற்ற பாரமாக வளரும். இயந்திர முன்னேற்றம், மனிதனுடைய இயற்கைக்குகந்த உழைப்பு வாழ்வைப் பாழாக்கிவிட்டது. இயந்திர முன்னேற்றமே நேராகக் கெடுத்ததென்று சொல்ல நியாயமில்லை. இயந்திரம் உழைப்பின் அவசியத்தை நீக்கவே, மனிதர் சோம்பலுக்கிடங் கொடுத்தனர். இயந்திரம் நீக்கிய உடலுழைப்பை வேறு விதமாகப் பெற முயற்சிக்கவில்லை, உடலை எத்தீவிரத் திட்டத்தில் வைக்கின்றோமோ அதற்கொத்தவாறு தான் வீணைத் தந்தி போல் உயிர்…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 4

ஆத்மா எப்பொழுதும் அடையப்பட்டதாயிருப்பினும் அஞ்ஞானத்தால் அடையப்படாததது போல் தோன்றுகிறது. அஞ்ஞானம் நீங்கியதும் ஒருவன் தன் கழுத்தில் ஏற்கனவே இருந்த ஆபரணத்தைக் கண்டு கொள்வது போல் ஆத்மா ‍ அடையப்பட்டது போல் பிரகாசிக்கிறது. உலகனைத்தும் ஆத்மாவே, ஆத்மாவிற்குப் புறம்பாக ஒரு சிறிதுமில்லை. குடம் முதலியவை மண்ணெனக் காண்பது போல் ஞானி அனைத்தையும் ஆத்மாவாய்க் காண்கிறான்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 45

சந்நிபாத குறி ….. கறுப்பு வன்னமாய் மூத்திரநிறமிருந்தால் சந்நிபாதமென்றும் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பிரசூதி தோஷ குறி ….. மஞ்சள் நிறமும் உபரிபாகத்தில் கிருஷ்ண வர்ணத்துடன் புத்புதாகாரமாய் மூத்திரம் விசர்ஜனமானால் பிரசூதி தோஷமென்றும் அறியவேண்டியது. பித்த வாத கப சுராதிக்க குறி ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறமும், வதாதிக்கத்தில் ரத்தநிறமும், கபாதிக்கத்தில் நுறை நுறையாயும், சுராதிக்கத்தில் புகை நிறமும் தோணுகின்றது. மேலும் தயிலபிந்துவை மூத்திரத்தில் விட்டு அதனால் தோணுகின்ற உருவங்களைத் தெரிந்து அதன் சுபாசுபங்களை அறிந்து சிகிச்சை…

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 5

எமாதித்யர் சூரியனின் மகன் எமதர்மன் தன் சக்தியை அதிகரிக்க விரும்பி, சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. எமாதித்யர் என்னும் பெயரில் இங்கு அருளும் சூரியனுக்கு காசி சங்கடா காட்டில் கோவில் உள்ளது.

சுந்தர யோக சிகிச்சை முறை 39

இயற்கை, உடலை உழைப்பிற்கென்றே அமைத்துள்ளது. உடலின் எந்த பாகமும் அவசியமற்றதல்ல. ஒவ்வொரு பாகமும் உழைப்பில் ஈடுபட்டு, உழைப்புக் கூட்டுறவால் உடல், உயிர், உன்னத வாழ்வு பெறவேண்டுமென்பதே திட்டம். இந்த திட்டத்தை முறித்தால் அந்த பாகம் பலவீனமடையும் அல்லது உடல் முழுவதும் நோய் கொண்டு அழிவு ஏற்படும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 3

புத்திமான் தன்னுடைய அறிவால் காணும் உலகனைத்தையும் ஆத்மாவில் ஒடுக்கி ஆத்மாவானது களங்கமற்ற ஆகாயம் போன்றதென்று எப்பொழுதும் தியானிக்க வேண்டும். அருணோதயத்தால் இருளானது முதலில் நீக்கப்பட்ட பின் சூரியன் தானே பிரகாசிப்பது போல் அஞ்ஞானம் ஞானத்தால் நீக்கப்பட்ட பின் ஆத்மா தானே பிரகாசிக்கும்.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 4

விமலாதித்யர் தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்கு காட்சியளித்த சூரியன், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது என அருள் புரிந்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் சூரியனுக்கு கோவில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர் ‘ என்ற பெயர்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 44

ரசாதிக்ய மூத்திர குறி ….. மூத்திரமானது கரும்பு ரசத்தைப் போல் ஒத்து நேத்திரமானது பிஞ்சர வன்னமாயும் இருந்தால் சகாதிக்யத்தினால் உண்டானதென்று அறிந்து வங்கணம் செய்விக்கவேண்டியது. ஆமவாத ரோக குறி …… மூத்திரம் மஞ்சள் வன்னமாயும் அதிகமாயும் ஆனால் ஆமவாத ரோகம் என்று அறியவேண்டியது. அதிகசுர குறி ….. சிகப்பாயும் சுவச்சமாயும் தூமிரவன்னமாயும் மூத்திரமிருந்தால் அதிக சுரமென்று அறியவேண்டியது.

உரையாடலின் ஒரு பகுதி 11

இனப்பற்றையும், மொழிப்பற்றையும் தொலைத்த சமுதாயம் , சமுதாயம் சக்தியுடன் வளரமுடியாது.   இப்போது உள்ள சூழ்நிலை திராவிடர் எனும் இனப்பற்றும் தமிழ் எனும் மொழிப்பற்றும் தேய்ந்து அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது.  அதனாலேயே தற்சமய சூழ்நிலையில் இனப்பற்றும், மொழிப்பற்றுமே வருங்கால சந்ததியினரை அடிமைகளாகாமல் காப்பாற்ற முடியும்.  ஆனால், பொருளாதார சிந்தனை மட்டுமே மேலோங்கிய நிலையில் உள்ள இக்கால சந்ததியினரால் இதை புரிந்து கொள்ள முடியுமா என்பதே கேள்விகுறிதான்.  

உரையாடலின் ஒரு பகுதி 10

மனித வாழ்க்கை சிறப்புறுவதர்கான கருணை எப்போதும் எங்கும் பொழிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த கருணையை சரியாய் உள்வாங்கி கொள்வது என்பது அவரவர்களிடமே இருக்கிறது. சரியாய் உள் வாங்கிவிட்டால் வாழ்வின் அர்த்தம் வாழும் விதம் புரிந்துவிடும். எதில் வெற்றி அடைய வேண்டுமென்றாலும் கேள்விகள் கூர்மையாக வந்து கேள்விகளுக்கு விடை காண அபாரமான வேகத்தில் இயங்க வேண்டும் . அப்படி இயங்கினால் வெற்றி அடைதல் சுலபமாகும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 38

பழக்க வழக்கங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த சுத்தம் நோய் வராமல் தடுக்க மெத்த அவசியமாகும். இதற்கு விரோதமானவை குடி போதை, பொடி, சுருட்டு, புகையிலை பழக்கங்கள், போதையில் கஞ்சா, அபின் பிரதானம் பெற்றவை மூக்கில் தூளேற்றுவது, புகையிலையை வாயில் போடுவது எல்லாம் நோயை அதிக சீக்கிரத்தில் வரவழைத்துக் கொள்ளும். பிணி தடுத்தலுக்கு இப்பழக்கங்கள் எதுவும் உதவாது.

உரையாடலின் ஒரு பகுதி 9

உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி மனம் பற்றும் விஷயத்தாலேதான் பற்றும் விஷயத்திற்க்கு சக்தி இதை புரிந்து கொண்டால் பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும் அப்படி தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை அணுகி கேட்டு தெரிந்து கொண்டால் சக்தி, பக்தி ஆகும். அந்த பக்தி சக்தியாகி நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 2

எப்படி ஒரு விளக்கைக் காண்பதற்கு வேறொரு விளக்கு வேண்டப் படுவதில்லையோ அப்படியே அறிவு வடிவான ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்துவதற்கு வேறொரு அறிவை வேண்டுவதில்லை. ஆத்மா தன்னை ஜீவன் என்று கொண்டால், ஒருவன் பழுதையைப் பாம்பு என்று கொண்டு பயப்படுவது போல் பயத்துக்குள்ளாகிறது. தான் ஜீவனன்று தான் பரமாத்மா என்று அறிந்தனுபவிக்கும் பொழுது பயமின்மையை மீண்டும் அடைகிறது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 3

லோலார்க்கர் மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் சூரியனை ‘ லோலார்க்கர் ‘ என்று அழைப்பர். காசியிலுள்ள அதிசங்கமத்தில் இவருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள ‘லோலார்க்க குண்டம்’ என்னும் குளம் புகழ்மிக்கது.

யாருக்கு விருப்பம் ?12

உயிரைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தவர்கள் சொத்து பற்றி யோசிக்க மாட்டார்கள் உடம்பு பற்றி யோசிப்பவர்கள் சொத்தோடு ஒட்டிக்கொள்வார்கள். சொத்தோடு ஒட்டிக்கொள்பவர்கள் உடலை தான் என்று நினைத்துக் கொள்வார்கள்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 43

வேறு விதம் ….. பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறம் அல்லது நிர்மலமான மூத்திரம் ஆகும். அப்படியே சமதாதுவிலும் கிணற்று சலம்போல் மூத்திரம் இறங்கும் க்ஷயரோகத்தில் கறுப்புநிறம் மூத்திரம் ஆகும். மேலும் ஊர்த்துவபாகத்தில் மஞ்சள் நிறம் அதே பாகத்தில் சிகப்பு வர்ணம் மூத்திரத்தில் தோன்றினால் பித்த பிரகிருதி சந்நிபாதமென்று அறிய வேண்டியது.

யாருக்கு விருப்பம் ?11

அப்படி அறியும் போது ஏற்படும் மவுனமே அறிவு, அந்த அறிவே தெளிவு, குரு, இறைவன், மற்றபடி அலைவதல்ல அறிவு. ஆர்ப்பரிப்பது அல்ல அறிவு, அடங்குதலே அறிவு. அமைதியே அறிவு இந்த பாடம் புரிந்ததென்றால் இறப்பை பற்றி அறிய உள்ள பால பாடத்தில் சேர்ந்ததாக நாம் நினைத்துக்கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 37

போகம் தேவையானால் மணத்திற்குக் காத்திருக்கும் காலமல்ல இது. போகிக்க ஆண், பெண் கூட்டுறவிற்கும் எதிர்பார்ப்பதில்லை. தன் கையே தான் கெட உதவியாகக் கொண்டு, சமூகத்தின் நர உருக்கொண்டு உலாவும், கழுதைப் புலிகளின் சண்டாளச் சேர்க்கை கற்பித்தலால், இஷ்டம் போல் விந்துவை செலவழிக்கக் கூடாது. மணவாழ்க்கை கொண்டவர்கள், கூட்டுறவை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் பற்றாது தடுத்துக் கொள்ள முக்கிய உதவி, பிந்து ரக்ஷணை.

யாருக்கு விருப்பம் ?10

நான் என்பதை அறிந்து அந்த நானிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தலே வெற்றி மற்றபடி எந்த வெற்றியும் வெற்றி ஆகாது அந்த நான் என்பது என்ன என்ற வினா தனக்குள் வரும் போது நான் என்பது உடலா, இல்லை மனமா என்ற வினா வரும் அது சரியா என ஆராய பொறுமை, நிதானம், அமைதி, சாந்தம், விடாமுயற்சி, இது அத்தனையும் தேவை இவைகளை கைகொள்ளும் போது அன்பு ஊற்று எடுக்கிறது. அந்த அன்பு தனக்குள் பெருக, பெருக…

யாருக்கு விருப்பம் ? 9

தன்னைதான் அறிய வேணும் சாராமல், சாரவேணும், பின்னைதான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி என்ன சொல்கிறது இந்த பாடல் தன்னை அறிய வேண்டும் என்கிறது தன்னை அறிவது என்றால் என்ன தனக்குள் இருக்கும் உணர்வுகளை அறிதல் அது தோன்றுமிடம் அறிதல் எதனால் தோன்றியது என்றும் அறிதல் அப்படியானால் உணர்வுகள் எத்தனை விதம் உணர்வுகள் பலவிதம் அதில் சில காம, கோப, லோப, மோக, மத, மாச்சர்யம் காதல் அன்பு பரிவு நேசம் பாசம் தியாகம் போன்றது இதில் நல்லது,…

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 1

ஆத்மா ஸத்தும் சித்துமே வடிவான ஆத்மாவை இடைவிடாத அப்பியாஸத்தாலன்றி அறிய முடியாது. ஆகையால் ஞானத்தை நாடுபவன் தன்னுடைய லக்ஷியத்தையடைய நீண்ட காலம் தியானம் பழக வேண்டும். ஒரு விளக்கானது குடம் முதலியவற்றைப் பிரகாசப்படுத்துவது போல் ஆத்மா ஒன்றே புத்தி முதலியவற்றையும் இந்திரியங்களையும் பிரகாசப்படுத்துகிறது. ஜடமான அவற்றால் ஆத்மா பிரகாசமடைவதில்லை.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள் 2

அருணன் காசியப முனிவரின் மனைவி விநதை, இரண்டு பிள்ளைகளை பிரசவித்தாள். முதல் பிள்ளை அருணன், இரண்டாவது பிள்ளை கருடன், சூரிய பகவானை வழிபட்ட அருணன், அவரது தேரை செலுத்தும் சாரதியாகும் பேறு பெற்றார். காசி திரிலோசனர் கோவிலில் அருணன் வழிபாடு செய்த சூரிய பகவான் ‘அருணாதித்யர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

யாருக்கு விருப்பம் ?8

எண்ணம் எனும் விதை பல தரத்தில் இருக்கிறது. அந்த விதைகளில் சில காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம், அன்பு, காதல், பாசம், நேசம், நட்பு, தியாகம், பரிவு, பண்பு, இத்தனை விதைகளும் வளர்ந்து மனிதனை பல விதங்களில் இம்சை படுத்துகிறது. சந்தோஷபடுத்துகிறது. இறப்பில் இவை அத்தனையும் நி‍றைவு பெற்றதாய் சக மனிதன் நினைக்கிறான். ஆனால் சாஸ்திரம் இவை அனைத்தும் தொடரும் என்கிறது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 42

இதுவுமது ….. மூத்திரத்தை பார்க்கும்போது அடியில் ரத்தம் கலந்து போல் தோணுமாகில் அதிசார ரோக மென்றும், நெய்பிந்துக்களைப் போல் இருக்குமாகில் ஜலோதர ரோகமென்றும், வசும்பைப் போல் வாசனையும், தயிரைப்போல் நீர் இறங்குமாகில் ஆமவாதமென்றும், குங்கும நிறம் அல்லது மஞ்சள் நிறமூத்திரமும் அதே வன்னமான மலமும் ஆகுமாகில் வாதசுர மென்றும் அறிய வேண்டியது.

யாருக்கு விருப்பம் ?7

பஞ்ச பூத தத்துவத்தில் மனதை ஆகாய தத்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ தோன்றுகிறது. மனம் நிலத்தத்துவமோ என்று ஏனென்னறால் நிலம் தானே. எந்த விதையையும்வளர செய்கிறது. அது மாதிரி எண்ணம் எனும் விதை மனதில் விழுந்தவுடன் மிக வேகமாக எண்ணம் வளர்ந்து விடுகிறது. அது பிறகு பல விதங்களில் ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மனிதன், மனித குலம் தடுமாறி தள்ளாடி ஆடுகிறது. அதில் ஏற்படும் கலக்கம் குழப்பம் பயம் மனித குலத்தை படுத்தும் பாடு சொல்லிமாளாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 36

போகம் என்பது பிந்து ( விந்து ) வீரியத்திற்கு சம்பந்தப்பட்டது. வயது வந்து, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கென்று ஏற்பட்ட திட்டம் தற்காலக் கலியுக வாழ்க்கையில், மணந்தவன், மணமாகாதவன், எல்லோரும் விந்துவை வரியில்லாத குழாய்த் தண்ணீர் போல் செலவழித்துவிடுகிறார்கள். மணமாகாதவன் பண்டைக் காலத்தில் பிரம்மசாரி என்று பெயர் பெற்றிருந்தான். பிரம்மசாரி என்பது விந்துவை ரட்சணை செய்கிறவன் என்றும் பொருள் பெற்றிருந்தது.

யாருக்கு விருப்பம் ? 6

இறப்பு உடல் சம்பந்தப்பட்டதுதான் அதில் சந்தேகம் இல்லை ஏனென்றால் இறப்பு என்ற ஒன்று உடலை இயங்க அனுமதிப்பது இல்லை. இயங்காத உடல் அழுகி நாறி ஏதேதோ ஆகி அந்த உடல் இல்லாமல் பேய் விடுகிறது. மனம் என்ற ஒன்று உடலில் ஏதோ ஒரு வஷ்துவாய் இருந்தாலும் அது மனிதனுக்கு தெரியவில்லை. தெரிவதில்லை அதை அடுத்தவருக்கு காட்ட முடிவதும் இல்லை. இதை தான் கண்ணதாசன் தன் பாடலில் அழகை காட்டும் கண்ணாடி மனதை காட்ட கூடாதோ என எழுதியிருப்பார்.…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 14

எனக்கு ஞானத்தை அளித்து அஞ்ஞானம் நிறைந்ததும் பிறப்பிறப்பு வடிவானதுமான ஸம்ஸாரஸாகரத்தினின்று என்னைக் காப்பாற்றியவரும், போற்றுதற்குரியவர்களிற் சிறந்தவரும், எல்லாமறிந்தவருமான எனது குருநாதரை வணங்குகிறேன். அஞ்ஞான இருளிருந்தபொழுது இவ்வுலகம் முழுதும் உண்மையெனப்புலப்பட்டது. ஞான சூரியன் உதித்த பிறகு உலகை நான் காணவில்லை. இது ஆச்சரியம்.

யாருக்கு விருப்பம் ?5

இதிலிருக்கின்ற சிக்கல் என்னவென்றால் செத்தார் எப்படி திரிவார்கள் என்று தெரிந்தால்தானே அப்படி திரிய அது சரியாய் தெரியாத காரணத்தால் அவர் அவர்களுக்கு தோன்றியபடி திரியும் சில கூட்டங்கள் செத்தார்கள் இப்படிதான் திரிவார்கள் என சக மனிதர்களுக்கு பாடமும் எடுக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால் நரியையும் பார்த்ததில்லை அதன் கொம்பையும் பார்த்ததில்லை. நரி அதிகமாய் இருக்கும் காட்டையும் பார்த்ததில்லை ஆனால் நரி கொம்பு விற்கும் மனிதர்களை போல்தான் உள்ளது.

காசியை சுற்றி உள்ள 12 சூரிய கோவில்கள். 1

கங்காதித்யர் கங்கையை பூமிக்கு வரவழைத்தவர் பகீரதன், இவர் தன்னுடைய முன்னோர்கள் நற்கதி அடைவதற்காக ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கை பூமிக்கு வந்ததை அறிந்த சூரியன், இங்கு வந்து கங்கையை வழிபட்டார். அவர் வழிபட்ட சூரியக் கோவில் லலிதாகாட் படித்துறை அருகில், கங்காதித்யர் என்ற பெயரில் அமைந்துள்ளது.

யாருக்கு விருப்பம் ? 4

இறப்பில் இருந்து பாடம் கற்க துணிந்து அதில் இறங்கி அந்த பாதையை ராஜபாட்டையாய் மாற்றி நடைபோட்டவன் வரலாற்றில் எனக்கு தெரிந்து புத்தன் மட்டுமே. மற்ற எல்லோரும் அந்த பாதையை முட்டு சந்தாகதான் உபயோக படுத்தி யிருக்கிறார்கள். இறப்பை சிந்திக்க வாழும் வாழ்க்கை ஏனோ அனுமதிப்பது இல்லை என்றே தோன்றுகிறது. அதனாலேயே அனுபவத்தில் சிறந்த முன்னோர்கள் செத்தாரை போல் திரி என்று சொல்லியிருக்கிறார்கள்

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 41

மூத்திரதாரையின் நிறக்குறி ….. மூத்திரமானது வெண்மை தாரையாகவும், மஹா தாரையாகவும், மஞ்சள் வர்ணமாயும் இருந்தால் சுரரோகமென்றும், சிகப்பு நிற தாரையாயிருந்தால் தீர்க்கரோகமென்றும் கறுப்பு நிறதாரையாயிருந்தால் அவசியம் மரணமென்றும் சவ்வீரவரணமாகிலும் மாதுலங்க பல ஆகாரத்துடன் அதே வரணமாவது இருந்தால் சுபம். சலத்தைப்போல் இருந்தால் அசீரண மூத்திரமென்று அறியவேண்டியது.

யாருக்கு விருப்பம் ? 3

அவர்கள் அப்படிதான் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலைவயிலும் மனிதன் ஏனோ இறப்பை விரும்புவதில்லை. அதற்க்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இயற்கை அல்லது இறைவன் தன் கையில் வைத்திருக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று ஆனால் இது மிக முக்கியமானது மனிதனின் அறிவுக்கு புலப்படாதது எல்லா காலத்திலும் மனிதன் தோற்றவிஷயம் இது மட்டுமே.

சுந்தர யோக சிகிச்சை முறை 35

அவரவர்களின் தினசரி வாழ்வின் தன்மைக்குத் தக்கபடி 24 மணி நேரத்தில் ஆறிலிருந்து எட்டு மணி நேரமாவது நித்திரை செய்ய வேண்டும். இந்த நித்திரையில் ஒரு முக்கியப் பகுதி நடுநிசிக்கு முன்பாக அமைந்தால் உடல் மெத்த நன்மை பெறும் நாடகம், சினிமா, கூத்து, அதிகப்படிப்பு, உழைப்பு இவைகளால் நித்திரை கெட்டால் நோய் பற்றிக் கொள்ளக்காத்து நிற்கும். நோய் தடுத்தலுக்கு முக்கியமான திட்டம். சுமார் ஆறிலிருந்து எட்டுமணி நேரம் நித்திரை செய்வது.

யாருக்கு விருப்பம் ? 2

ஏனென்றால் இந்த வார்த்தைக்கு இந்த சொற்பொருளுக்கு இந்த அர்தத்தை தவிர நிறைய அர்தங்கள் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலே சொன்ன விஷயம் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆனால் அவர்கள் சொல்லவில்லை. காரணம் நாம் பயந்துவிடுவோம் என்று நினைத்திருப்பார்கள்.

யாருக்கு விருப்பம் ?1

இறக்க யாருக்கு விருப்பம் ? யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் விரும்பாத ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தானே இருக்கிறோம். விரும்பாத ஒன்றை செய்து தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு. கால அளவுகள் வேறு அவ்வளவுதான். இறப்பை விரும்ப வேண்டுமென்றால் முதலில் அதை படிக்க வேண்டும். இறப்பை படிப்பது எப்படி யார் சொல்லி தருவார்கள் அப்படியே சொல்லித்தந்தாலும் நமக்கு அது புரியுமா நாம் இருக்கும் சூழ்நிலை நாம் பெற்ற அறிவு சொல்லித்தருவதை ஒத்துக்கொள்ளுமா பெரிய கேள்வி தான்…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 13

வேதாந்தத்தின் விஷயமான ஞானம் சித்தித்தால், ஜீவனே பிரம்மம் என்ற அனுபவம் ஏற்படும். அதனால் ஒருவன் பிறவித் தளையினினின்று முற்றும் விடுபடுகிறான். ஆத்ம ஞானத்திற்கொப்பாவது வேறெதுவுமில்லாமைாயல், ஒருவன் எப்பொழுதும் சீடனுடைய குணங்களைக் கைக்கொண்டு ஞானத்தைச் சம்பாதித்துப் பிறவிக்கடலைக் கடந்து செல்லவேண்டும்.

எந்த திட்டமும்

எந்த திட்டமும் அது பெரியதோ, சிறியதோ காலத்தின் அனுகூலத்திலோ, அல்லது பிரதி அனுகூலத்திலோதான் இருக்கிறது நாம் திட்டம் தீட்டலாம் ஆனால் முடிவு காலத்தைப் பொறுத்தது. அதாவது, காலமாகி இருக்கின்ற கண்ணுக்கும், புலன்களுக்கும், அறிவுக்கும் புலனாகாத சக்தியைப் பொறுத்தது.

வேதாந்தம் பேச

எல்லோரும் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள், வேதாந்தம் பேச வயது வேண்டும் என்று உண்மையில் வேதாந்தம் வயதில் இல்லை. வேதாந்தம் இருப்பது சிந்தனையின் நுட்பத்திலும் விவேகத்தின் அடித்தளததிலும் இருப்பது.

தத்துவம் எது

தத்துவம் எது என்று வினா வந்தால் சிறிதும் யோசிக்காமல் விடையை சொல்லிவிடலாம் மனித வாழ்க்கையென்று ஆம் வேறு எது பெரிய தத்துவமாக இருக்கமுடியும். எத்தனை தத்துவங்கள் இருந்தாலும் மனித வாழ்க்கைக்கு வேண்டிதானே தத்துவம். தத்துவம் நிலைபெறுவது தர்க்கத்தினால் மனித வாழ்க்கை எனும் தத்துவத்திற்கு, மனித வாழ்க்கையின் ஒட்டமே தர்க்கம். ஒவ்வொரு மனிதனின் காலமும், முன்னேற்றமும், வீழ்ச்சியும், சாதக, பாதகங்களுமே மிக சிறந்த தர்க்கங்கள்.

சாந்தமும்,அமைதியும்

வருட கணக்கில் போர் செய்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிடலாம். அணுவை பிளக்க செய்து மலையை தரைமட்டமாகிவிடலாம் பிடிவாதத்தை மூலதனமாக்கி எட்டாத மலைகளிலும் ஏறிவிடலாம். அணையை கட்டி நதியின் பிரவாகத்தை கட்டுபடுத்திவிடலாம் ஆனால் பலவந்தமாய் ஒரு பூவை மலர செய்ய முடியாது. அது இயற்கையால் தான் முடியும். இது எப்போது ஒருவருக்கு புரிகிறதோ அப்போதே புரிந்தவர் எல்லா விஷயங்களையும் சரியான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவார் அதுமட்டுமல்ல தன்னை மீறிய சக்தி உண்டு தன்னால் செய்ய முடியாத வேலைகளும்…