ஸ்ரீ சங்கரரின் ஞானம் 12

முக்தியை விரும்பி ஒருவன் கங்காஸாகரத்திற்கு யாத்திரை செல்லலாம் விரதமிருக்கலாம், ஏழைகளுக்கு தானம் செய்யலாம், ஆனால் ஞானமின்றி இவை முக்கியளிக்க மாட்டா. ஆத்மஞானம் இங்கேயே இப்பொழுதே முக்தியளிக்கிறது. ஞானத்திலிருந்துதான் முக்தி என்பது உபநிஷதங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஞானத்தால் இங்கேயே, இப்பொழுதே, உடனே பயன்கிட்டுவதால், ஞானத்தால் என்ன பயன் என்ற அச்சத்திற்கு இடமே இல்லை.

கடவுள் இருக்கிறாரா? 8

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை ஏன் வருகிறது வாருங்கள் சிந்திப்போம். முதலில் நமது ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை. இரண்டாவது ஏதோ ஒரு சிலருக்கு கடவுளை காணவேண்டும் என்ற ஆர்வம். மூன்றாவது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களால் நமக்கு ஏற்படும் கலக்கம் அந்த கலக்கத்திலிருந்து விடுபட நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய பொருள் கடவுள். நான்காவது நம்மை சுற்றியிருக்கும் ஏதோ சிலர் சொல்லும் வார்த்தையான கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நரகத்திற்க்கு போவாய் என்ற வார்த்தையால் ஏற்பட்ட பயம் அது…