கோள்களின் கோலாட்டம் 2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 19
மேசம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் லக்கினத்திற்கு 2 – மிடமாகவும், நவாம்சத்திற்கும் மேற்படியே 2 – ஆமிடமாக அமைந்து, சந்திரன், செவ்வாய், சுக்கிரன் இருந்தாலும், இவர்களில் யாராவது ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் துரிதமாக தெளிவாக வார்த்தைகளை பேசுவார். வார்த்தை சித்தன்.வாக்குஸ்தானாதிபதி யோக காரகனாய், கேந்திரங்களில் உச்சம் பெற்றிருக்க, வாக்குஸ்தானத்தில் கேது இருக்க, புத்திரஸ்தானாதிபதி, நோக்கினாலும், இருவரும் பலமாக இருந்தாலும் இந்நிலை கிரக அமைப்பில் பிறந்தவர்கள் சமயோசிதமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்.