கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14

 2 – இல் ராகு, மாந்தி 2 – க்குரியவர் புதன் சாரம் பெற்று சூரியனுடன் சேர்ந்து, சனியின் தொடர்பை பெற்றால், ஒரு கண் பழுதாகும். இல்லற வாழ்க்கை சரிப்படாது. வெறுக்கக்கூடிய வஸ்துக்களை சாப்பிடுவான். 2 – க்கு அதிபதி புதனாகி,9, 3 – க்குரியவர், கேது தொடர்பால் பெற்றால் லட்சக்கணக்கான ரூபாய்களில் புழக்கம் ஏற்படும். நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்றவைகளில் புழக்கம் காணும். ஜாதகர் அதனால் சுகம் அடைய முடியாது.  2 – க்குரியவர், 4,…

மூதுரை

 அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 30

அன்ன பக்கவ ரத்த விருத்தி ஆமாசீரணகால நாடி லக்ஷணம் ….. அன்னபக்கவா சீரணகாலத்தில் நாடியானது புஷ்டி ரஹிதமாயும் மந்தமாயும் நடக்கும் சரீரத்தில் ரத்தமானது அதிகமாய் இருக்கும் போது நாடியானது கொஞ்சம் உஷ்ணமாய் நடக்கும். ஆமாசீரண யுக்தமான நாடி குருத்துவமுள்ளதாய் நடக்கும். சுக க்ஷ த்து மந்த பலஹீன நாடி லக்ஷணம் ….. சுகமாய் இருப்பவனுடைய நாடி ஸ்திரமாயும், பசியுடன் கூடி இருப்பவனது நாடி சபலமாயும், மந்தாக்கினி உடையவன் பலம் இல்லாதவன் இவர்களின் நாடி அதிமந்மாயும் நடக்கும்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13

 2 – ல் சனி இருந்தாலும், பார்ததாலும், 7 – க்குடையவருடன் கூடினாலும், 2 – க்குரியவர் பலம் பெற்று இவருடன் தொடர்பு பெற்றாலும் இரண்டு குடும்பம் அமையும். பெண்கள் ஆனால் 2 – ஆம் தாரமாக வாழ்க்கைப்படுவர். இவ்வமைப்பு பெற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் தீராத மன வருத்தம் காணும்.  2 – ல், 8 – க்குரியவர், இவரை சனியும் 1, 2 – க்குரியவரும் பார்த்தால் துர்வார்த்தை பேசுவோன். குடும்பத்தில் அக்கரை இல்லாதவன், கல்வி…

கோள்களின் கோலாட்டம் 2ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 12

 2 – க்குரியவர், ராகு, 6 – க்குடையவர் தொடர்பு பெற்றாலும் 2, 6, 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றாலும், 2 – க்கு 8 – ஆமிடத்தில் உள்ள கிரக தசாபுத்திகள் வந்தாலும், கடன்தொல்லை, குடும்பத்தில் அபகீர்த்தி உடன்பிறப்பு வகை விரோதம், குடும்பத்தில் தனக்கஷ்டம், முகம், பல் வகையில் நோய் ஏற்பட்டு அதன் அழகு கெடும். 2 – மிடத்தை பாவர்கள் பார்க்க, 2 – ல் சனி அல்லது ராகு இருக்க, நாயால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 23

மோட்டார் கார் உழைப்பால் கேடடைந்து கொண்டே போகும். தனக்குத் தானே பொருளை உண்டு, சரி செய்து கொள்ளச் சக்தியற்றது. தன்னை வளர்த்துக் கொள்ளவும் சூழ்ச்சி கொண்டதல்ல, மானிட இயந்திரமான உடலோ கிடைக்கும். பொருளால் வளரவும், தன்னைச் சரி செய்து கொள்ளவும் சக்தி பெற்றது. எண்ணற்ற வித்தியாசங்களில் இது ஒன்றே ஒன்று. எனவே அளிக்கப்படும் உணவுப் பொருளானது, உஷ்ணம், சக்தி கொடுப்பதுமின்றி உடலை வயதுக்கு தகுந்தவாறு வளரச் செய்யவும், வாழ்வில் செத்த அணுக்களுக்குப் பதில் புது அணுக்களை உண்டாக்கவும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 50

ஒரு சாதுவைக் கண்டால் நீங்கள் அவருக்கு எல்லா மரியாதைகளையும் செய்ய வேண்டும். கோபத்துடன் பதிலுரைப்பதாலோ, அன்றி மதிப்பற்ற மொழிகளாலோ அவருக்கு நீங்கள் அவமரியாதை செய்யக் கூடாது. ஒரு பெரிய மகானுக்குப் பணிவிடை செய்யுங்கால், பின்வரும் முறைகளில் ஒருவன் தவறு செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய பணி செய்யும் உரிமையை ஒருவன் அனுபவிக்கும்போது, அவனுக்கு அகங்காரம் மேலிடுகிறது.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 11 

 2 – க்குரியவர் கேந்திரம் பெற்று, 4, 5 – க்குரியவர் பலம் பெற்று இவர்களை சுபர் பார்த்தால், கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டு. மனோ திடம் மிக்கவன். தெய்வீக ஞானம் பெற்றவன். ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவான். இவருக்கு பிறக்கும் குழந்தைகளும் கல்வி அறிவு மிக்கவரே.  2 – ல், 7, 8 – க்குரியவர் இருந்து, 3, 11 – க்குடையவரின் தொடர்பு பெற்று, மேற்படி கிரக தசாபுத்திகள் நடக்கும்போது மிகவும் கஷ்டத்தை தரும். தனசேதம்,…

கோள்களின் கோலாட்டம் 2ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 10

 2 – க்குரியவர் பலம் பெற்று சந்திரன், குரு சுபத்தன்மை பெற்று 4 – க்குரியவர் தொடர்பு பெற்றால், சுக போஜனம் விதவிதமான ஆகாரங்கள் சாப்பிடுவான்.  2 – ல் சுக்கிரன், 5 – ல், 3 – க்குரியவர் மாந்தி சேர்ந்து, 2 – க்குடையவர் தொடர்பு பெற்றால் கல்வியில் தேர்ச்சி பெற்றவன். சாஸ்திரங்களை திறம்பட பேசுவான். வாக்கில் மென்மையும் வசீகர சக்தியும் இருக்கும். வம்ச விருத்தியில் பாதிப்பு காணும். ரத்த பந்த வகையில் பிரேத…

ஸ்ரீசங்கரரின் ஞானம். 2

தன்னாலோ, பிறராலோ ஆத்மாவைக் கொள்ளவும் முடியாது. தள்ளவும் முடியாது. அதுவும் எதையும் கொள்ளுவதுமில்லை, தள்ளுவதுமில்லை. இதுதான் உண்மையான ஞானம். வேதங்களிலும் தேவதைகளிடமும் உறையும் உன்னதமான ரகசியம் ஞானமே. அதுதான் பரிசுத்தமளிப்பவற்றுள் தலை சிறந்தது.

கொஞ்சம் சிரிக்க

ஆசிரியர்:   உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம்! அம்மா:   அவனுக்கு “பொய் ” சொல்லவே தெரியாது சார்.  தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை. மகன்: நீங்க தானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க. எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க? என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார் இந்நேரம் விழுந்திருக்குமே சார்? இன்னும் விழுந்திருக்காது, சார் அது அஞ்சு நிமிஷம்…

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 9

 2 – க்குடையவர் ஆட்சி பெற்று 9, 4 – க்குரியவர் தொடர்பு பெற்ற புதன் பலம் பெற்றால் கல்வியில் விருத்தி உண்டு. வாக்கு, நாணயம் தவறாதவன். தன விருத்தி உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் பல மொழிகளை அறிவான். 2 – ல் 2, 4, 5 – க்குரியவர் இருந்து சுபத்தன்மை பெற்ற கிரகங்களால் பார்க்கப்பட்டு இருப்பின், மேற்படி கிரகதிசாபுத்தி காலங்களில் தன விருத்தி, வீடு, வாகன சேர்க்கை சுபச்செலவுகள் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8

 2 – ல் 8 – க்குரியவர் சுபர் பார்வை பெற்றால் உயில், மரண சாசன மூலம் சொத்து சேர்க்கை வரும் மனைவியால் சொத்து சேர்க்கை ஏற்படும். கிருத்திகை, மூலம் இவற்றில் கேது இருந்து, ரேவதி, பரணி, ஆயில்யம், பூசம், சித்திரை, சுவாதியில் சனி இருந்து, புனர்பூசம், திருவாதிரையில் சுக்கிரன் இருந்து, இவர்கள், 2, 6, 8 – ல் இருந்தால், கண் பங்கமடையும். குடும்பத்தொல்லைகள் கணக்கில் அடங்கா.

நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

குற்றமில்லாத மனசுதான் 4

இப்ப புதுசா வந்துருக்கற விதி என்னன்னா யார் உரத்து பேசறாங்களோ அவங்க சத்தியம் பேசறாங்க அப்படிங்கறது தான் சத்தியத்துக்கே இது தான் கதின்னா உண்மைக்கு என்னன்னு சொல்லறது அடுத்தது குற்றம் குற்றம் அப்படின்னாலே ரெண்டு பேரோ அதுக்கு அதிகமாகவோ நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கணும் சம்பந்தப்பட்டவங்க ஒன்னும் பிரச்னை இல்லை அப்படின்னு சொல்லிட்டா குற்றம் எங்கிருந்து வரும் உதாரணம் லஞ்சம்

கோள்களின் கோலாட்டம் 2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7

4, 8 – ல் சனி இருந்து சுப ஆதிபத்தியம் பெற்று குருவை பார்த்தால் வம்பு, வழக்கு, பூர்வீக சொத்துக்களால் மரணத்தின் மூலம் அதிர்ஷ்டம் ஏற்படும். 1, 4, 7, 10 – ல் சனி சந்திரனிருந்தால் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  2, 5, 9 – க்குரியவர் 10, 12, 11 – லிருந்தால் வாலிபத்தில் சொற்ப தனயோகம் 7, 8, 9 – லிருந்தால் 25 முதல் 40 வயதுக்குள் யோகம். 1, 2, 3…

குற்றமில்லாத மனசுதான் 3

அடிப்படையே மாறின பின்னாலே சரியாய் இருக்கோம் அப்படின்னு எப்படி சொல்லறது அதனால நாமலே ஒரு முடிவுக்கு வந்து இது தான் சத்தியம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம் அந்த முடிவு என்னான்னா அவனவன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அது தான் சத்தியம் அப்படிங்கறது தான் இதுல பாத்தா வேதம் சொன்னபடி இருக்கணும் அப்படிங்கற அவசியம் இல்ல நீ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இதுனால என்னாச்சுன்னா இந்த காலத்துல எல்லாரும் சத்தியம் தான் பேசறாங்க எல்லாருமே உரத்துதான் பேசறாங்க…

கோள்களின் கோலாட்டம் -2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6

 சிம்மத்தில் சூரியன் இருந்து, அல்லது சூரியனோடு சுக்கிரன் செவ்வாய், சனி தொடர்பு பெற்றால் வலது கண் பழுதடையும், சிம்மத்தில் சந்திரன் இருந்து அல்லது சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி தொடர்பு பெற்றால், இடது கண் பழுதடையும். கண் ஆபரேசன் செய்ய, புதன், வியாழன், வெள்ளிக்கிழமை நலம். இக்கிழமை காலங்களில் நேத்திரம், ஜீவன் இருக்க வேண்டும். 2 – க்குரியவர்க்கு, குருவிற்கு, 3,10, 11 – ல் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால், தனத்திற்குப் பஞ்சமே ஏற்படாது. அதிர்ஷ்ட…

குற்றமில்லாத மனசுதான் 2

சத்தியம் அப்படிங்கறது முன்னோர்கள் சொன்ன படி பாத்தா கடவுளால் அருளப்பட்ட அல்லது ரிஷிகளால் கிரகிக்கப்பட்ட விஷயங்கள் அதாவது வேதங்கள் சத்தியம் அப்படின்னு சொல்லறாங்க அப்ப வேதத்தின் படி வாழ்தலே சத்தியம் அப்படின்னு ஆகுது நாம இப்ப வேதப்படி வாழறோமா அப்படின்னு அவங்க அவங்கலே மனச தொட்டு கேட்டு பாத்துக்க வேண்டியது அப்படி கேட்டு பாத்தா இல்லை அப்படின்னு தான் பதில் வரும் நம்மனால அதை ஒத்துக்க முடியாது ஏன்னா நாம சத்தியம் தான் பேசறோம் அப்படிங்கற மனோநிலையில்…

கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5

2, 6, 8, 12 – ல் சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்று, சனி, செவ்வாயின் தொடர்பை பெற்றாலும், 2- க்குரியவர் நீச்ச அஸ்தமனம் பெற்று 2 லிருந்து செவ்வாய் லக்கினத்திற்கோ சுக்கிரனுக்கோ 5 – ல் ராகுவுடன் சேர்ந்து, சூரியன், சனி தொடர்பை பெற்றாலும், 2 – க்குரியவர் செவ்வாய், கேது, சூரியன் சேர்க்கை பெற்று சனியின் தொடர்பை பெற்றாலும் கண் பார்வை கெடலாம். இவர்கள் திசாபுத்தி காலத்தில் யாருடைய ஆதரவுமின்றி, குடும்பத்தை விட்டு ஒதுங்க…

குற்றமில்லாத மனசுதான் 1

குற்றமில்லாத மனசு தான் சத்தியத்தை சத்தமாக பேசும். உண்மையை உரத்துப் பேசும். இந்த வார்த்தைகள் என்ன சொல்ல வருது இதை பத்தி நாம ஒரு முடிவுக்கு வரணும் அப்படின்னா நமக்கு சத்தியம் அப்படின்னா என்ன உண்மை அப்படின்னா என்ன குற்றம் அப்படின்னா என்னங்கிறது நமக்கு தெளிவா தெரிஞ்சிருக்கணும். நாம வச்சிருக்கிற அகராதியில இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் நாம வச்சிருக்கோம் அப்படின்னு நமக்கு தெளிவா தெரிஞ்சாதான் நமக்குள்ள ஒரு முடிவுக்கு வரமுடியும் சரி இப்ப யோசிப்போம்

கோள்களின் கோலாட்டம் -2 ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4

 2 – க்குரியவர், பலகீனம் அடைந்து சுக்கிரனோடு சேர்ந்து 6, 8, 12 – லிருப்பினும், 2 – க்குரியவரோடு சூரியன், சுக்கிரன் சேர்ந்து சனி, செவ்வாயின் தொடர்பை பெற்று 6, 8, 12 – லிருப்பினும் பிறவியிலேயே கண் ஊனமாகும். அல்லது மத்திம வயதில் வரலாம். இவர் தசா புத்தி காலத்தில் தன, குடும்ப நிலை கெட்டுவிடும்.  2- க்குரியவர், சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று 2, 6, 8, 12 – ல் இருப்பின்,…

கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 3

2 – ல் குரு சுபர் சேர்க்கை பெற்று இருப்பினும், புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, பாவர் பார்வை இல்லாமலிருப்பினும், 2 – ல் சுக்கிரன் வர்க்காதிபதியாகி வலுத்தாலும், 2 – க்குரியவர் கேந்திர திரிகோணங்களிலிருந்தாலும், மேடை பேச்சில் வல்லவர், எழுத்து துறையில் புகழ் பெற்றவர். நாவன்மை மிக்கவர். தன் பேச்சால், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்றவர். 2 – க்குரியவர், சனியின் தொடர்பு பெற்றிருப்பினும், 2 – ல் சூரியன், சனி இருந்து, செவ்வாயின்…

ஸ்ரீசங்கரரின் ஞானம். 1

எப்படி ஒளியின் உதவியில்லாமல் ஒரு பொருள் ஒரு பொழுதும் பார்க்கப்படுவதில்லையோ, அப்படி மனதில் ஆராய்ச்சியில்லாமல் எதனாலும் ஞானம் அடையப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. கண்ணாடி போன்ற மனதானது பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனதைப் பரிசுத்தமாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 49

கீழ் கூறப்பட்டுள்ள மூன்று விஷயங்களில் நீங்கள் மிக்க எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதலாவது, ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள வீடு. எந்நேரத்திலும் ஆறு பெருக்கெடுத்து,      உங்கள் வீட்டை அரித்துச்சென்று விடலாம். இரண்டாவது பாம்பு, ஒரு பாம்பைக் காணும்போது நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில், அது எப்பொழுது உங்களை அணுகித் தீண்டும் என்பதை உங்களால் அறிய முடியாது. மூன்றாமவர் சாது, அவரது ஒரு எண்ணமோ அல்லது வார்த்தையோ ஒரு இல்லறத்தானை எப்படிப் பாதிக்கும் என்பதை…

கோள்களின் கோலாட்டம் -2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள்.

2 – ல், 9, 11 – க்குரியவர் பலம் பெற்றிருப்பினும், 1- க்குரியவர் 2- ஆமிடத்தை, பார்த்து, 1 – க்குரிய வரை குரு, 5, 9 – ஆம் பார்வையால் பார்த்து இருக்க 2 – க்குரியவர், 2, 11 – ல் பாக்கியாதிபதியோடு கூட குறை இல்லாத தனம் உள்ளவன். அடுத்தவர்களுடைய தனம் இவர்களிடம் விளையாடும், இறப்பு வரையில் தரித்திரம் என்பதை பார்க்காதவன். மேற்படி கிரக தசாபுத்தி காலங்களில், எதிர்பாராத தனம் வந்து…

கோள்களின் கோலாட்டம் -1.24 .2 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள். 1

 2 – க்குடையோர், நீச்ச, சத்துருஸ்தானங்களிலிருந்து நீச்ச, சத்துரு அம்சத்தை அடைந்தால், அல்லது நீச்ச கிரகத்தால் பார்க்கப்பட்டால் தனக்கு இல்லாமையால், அடுத்தவரிடம் வாங்கி உண்பான். அடுத்தவர்களை நீச்ச வழியில் உடன்டச் செய்து, அவ்வகை வருமானங்களை வைத்து ஜீவிப்பான்.  2 – க்குடையவர் 3, 6, 8, 12 – ல் இருந்து ராகுவின் தொடர்ரபை பெற்றாலும், 2- க்குரியவர் சனியாகி நீச்சம் பெற்று, செவ்வாய் சேர்க்கை இருப்பினும் மேற்கண்ட பலனே உண்டாகும்

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 29

பூதசுர ஆஹிகசுர விஷசுர நாடி லக்ஷணம் …. . பூதாசுரத்தில் நாடி அதிவேகமாய் நடக்கும். மேலும், முறைகாச்சல், விஷசுரம், இவைகளில் நாடி கொஞ்ச நேரம் வேகமாயும் நின்றும் நடக்கும். துவாஹிக திரியாஹி கசாதுர்தாஹிக சுர நாடி …… இரண்டு நாள் மூன்று நாள், நாலு நாளுக்கொரு முறை வரும் சுரங்களுக்கு நாடியானது அதி உஷ்ணமாய் கொளவி நடை நடக்கும். குரோத காம சுர நாடி லக்ஷணம் ….. குரோத சுரத்தில் நாடி விருத்தமாயும், காமசுரத்தில் நாடியானது ஒன்றுக்…

சுந்தர யோக சிகிச்சை முறை 22

ஆண்டவன் படைத்த இயந்திரமான உடலும், சீர்கெட்ட உணவை, குறைவுபட்ட உணவைப் பெற்றால், சரியாக வேலை செய்யாமல் சக்தி குன்றி, நோய் வந்து, வேலை நிறுத்தம் செய்யும். இந்த உதாரணம் உணவின் அவசியத்தையும் அது சீரோங்கி இருக்க வேண்டியதையும் விளக்குகிறது. மோட்டார் கார், மனிதன் உண்டாக்கிய இயந்திரம், மானிட உடலோ, ஆண்டவன், ஜீவனுக்கு சுகித்து வாழ்ந்து அகண்ட நித்திய சுகமான தன்னுடன் முடிவில் கலக்க, கொடுக்கப்பட்ட ஒப்பற்ற இயந்திரமாகும். இவ்விரண்டுக்கும், சக்தி சூழ்ச்சி உழைப்புகளில், சொல்ல முடியாத வித்தியாசங்கள்…

சுந்தர யோக சிகிச்சை முறை 21

ஆண்டவன் படைத்த இயந்திரமே மானிடஉடல். இந்த இயந்திரம் சுழல, வேலை செய்ய இதற்குப் பெட்ரோல் எண்ணெய் வேண்டும். இந்த பெட்ரோல் எண்ணெய் தான் நாம் தேடி உட்கொள்ளும் உணவென்பது. உழைப்பின் குணம், தீவிரங்களுக்குத் தக்கபடி உணவின் விதம். பிரமாணம் மாறுபாட்டைகிறது. எப்படி மோட்டார் காரில், பெட்ரோல் எண்ணெய் ஆவியாக மாறி தீப்பொறியால் வெடித்து, சூட்டு சக்தியைக் கிளப்பி உழைக்கிறதோ, அதே மாதிரி மானிட இயந்திரமான உடலில் உட்கொள்ளும் உணவு சூட்டுச் சக்தியாக மாறி, உயிரோங்க உழைக்கச் செய்கிறது.…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 48

எத்தகைய சிற்றறிவை மனிதன் பெற்றிருக்கிறான்? அவனுக்கு வேண்டுவது ஒன்றாயிருக்க, அவன் கேட்பது வேரொன்றாயிருகிறது பல சந்தர்ப்பங்களில் அவன் பிள்ளையார் பிடிக்கத் தொடங்குகிறான். அது குரங்காய் முடிகிறது. ஆகவே நம் விருப்பங்கள் எல்லாவற்றையும் இறைவனது பாதங்களில் ஒப்படைத்தலே சாலச் சிறந்தது. நமக்கு எவை மிக நல்லவையோ அவற்றையே இறைவன் நமக்கு அருள்வான். ஆனால், ஒருவன் பக்தி பெருகுவதற்கும் பற்று அற்றுப் போவதற்கும் பிரார்த்திக்கலாம். அவை மேற் கூறிய இச்சைகளின் பாற்படா.

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 13

நான் மாறுபடாதவன், உருவில்லாதவன், நான் எல்லா இந்திரியங்களிலும் எல்லா இடத்திலும் வியாபித்திருப்பதால் எனக்குப் பற்றின்மை என்ப‍தில்லை, முக்கியுமில்லை, பந்தமுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான். சங்கரரின் பஜ கோவிந்தம் இத்துடன் நிறைவு அடைகிறது 

மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தை மட்டுமே வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?

இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை…

ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 12

புண்ணியமும், பாவமுமில்லை, இன்பமும், துன்பமும் இல்லை, மந்திரங்களும், தீர்த்தங்களும், வேதங்களும், யாகங்களுமில்லை, நான் புசிப்பவனன்று, புசிக்கப்படுவதுமன்று, புசிக்கும் செயலுமன்று, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான் சிவமே நான். எனக்குச் சாவில்லை, பயமில்லை, ஜாதிபேதமில்லை, எனக்குத் தாயில்லை, தந்தையில்லை, பிறப்புமில்லை, எனக்குச் சுற்றமுமில்லை, நட்புமில்லை, எனக்கு குருவுமில்லை, சீடனுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

வாழ்க்கையில் நிர்பந்தம்

யாரோடும், எதனோடும் ஒட்டாத தன்மையோடு இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம உணவுக்கும், உடைக்கும், வம்ச விருத்திக்கும், அடுத்தவங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது தனிப்பட்ட அப்படிங்கற விஷயமே இல்லாதா போயிருது நம்முடைய அந்தரங்கத்துடன் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு ஒரு சூழ்நிலையில் நாம் அடுத்தவரை சார்ந்து இருத்தல் என்பது நிர்பந்தம் இதை புரிந்து கொண்டால் வீண் வார்த்தைகளால் அடுத்தவரை காயப்படுத்தும் பழக்கம் நம்மை விட்டு சென்றுவிடும் அது சென்று விட்டாலே சுற்றம்…

கேள்விகேட்க ஆரம்பிச்சா

கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது  அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…

வாழ்க்கையை நிர்ணயிப்பது

வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது திறமையோ, நமது அறிவோ, நமது கடமையோ அல்ல. அதை நிர்ணயிப்பது நமக்கு மீறிய சக்தி. அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வதே நமது கடமை. விதியின் புயலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள். யார், யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ, யார் கண்டது? இயற்கையின் விசித்திரத்தை நாம் அறிய முடியுமா? யாரே அறிவர்.

மன போராட்டம் தவிர்க்க

மனிதன் என்றுமே பணத்திற்க்கு அடிமையாக கூடாது. அப்படி அடிமையாகி விட்டால் மனபோராட்டத்தை தவிர்க்க முடியாது. மன போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் பணத்திற்க்கு மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களுக்கு அதாவது பெரியவர்கள் சொன்ன புலன் விஷயங்களுக்கு அடிமையாகக் கூடாது

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 47

சாவு எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை யாதலால், ஒருவன் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தூய எண்ணங்களைச் செயலாக்கிவிட வேண்டும். அதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக்கூடாது. சாவுக்கு காலப் பாகுபாடு கிடையாது. பலவற்றின் கலப்பான இத்தத்துவ ஆராய்ச்சியை, இந்த வறட்டு வாதத்தை விட்டு விடுங்கள். வாதத்தின் மூலம் இறைவனை அறியும் திறமை பெற்றவர் யார்?

அணு ஆயுதங்கள் 2

இந்த இடத்தில் வளர்ச்சி என்பது எதை அடிப்படையாய் கொண்டிருக்கிறது என்று சிந்தித்தால் வரும் பதில் அழிவு என்பதை தவிர வேறு என்ன பதில் வர முடியும். இப்போது, சிந்தித்து பார்த்தால் தோன்றுவது அணுவை பிளந்தது சாதனையா இல்லை, வேதனையா அவர் அவர் மனசாட்சிபடி முடிவு செய்து கொள்ளுங்கள். திருப்தியான நிலையை விட்டு வெற்றியை நோக்கி நகர்ந்த மனிதன் தனக்குத்தானே மிக பெரிய, ஈடு செய்ய முடியாத தோல்வியில் அல்லவா தடம் பதித்து விட்டான். இந்த இடத்தில் மூட…

அணு ஆயுதங்கள் 1

ஸ்வீடன் நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் S.I.PRT – அதன் ஆண்டு புத்தகத்தில் 2021 எனும் தலைப்பில் உலகில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளை பட்டியல் இட்டுள்ளது இந்த புத்தகத்தின் படி 9 நாடுகள் மட்டுமே உலகில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அந்த நாடுகள் அமெரிக்கா – 5,800, ரஷ்யா – 6375, பிரான்ஸ் – 290, இங்கிலாந்து 225, இஸ்ரேல் – 90 வட கொரியா 40 லிருந்து 50. இந்த புத்தக ஆய்வின் படி உலகெங்கும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 20

உணவு ஒழுக்கம் உழைப்பு. ஒரு இயந்திரம் வேலை செய்ய அது நன்றாக அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் போதாது. மோட்டார் காரை எடுத்துக் கொள்ளவும், இயந்திர சாலையிலிருந்து எல்லாம் உண்டாக்கப்பட்டு தொழில் புரியத்தயராகச் சேர்க்கப்பட்டு, அமைக்கப்பட்டு வெளிவருகின்றது. உடனே தானாக, ஏறி உட்கார்ந்ததும் ஓட அரம்பித்து விடாது. இந்த மோட்டார் வேலை செய்ய, அதற்கு உயிரளிக்கும் இஞ்சின் ( சூட்டு இயந்திரம் ) சுழல பெட்ரோல், எண்ணெய் வேண்டும். இந்த பெட்ரோல் எண்ணெய் தான் இதற்கு உணவு. இந்த உணவிலிருந்து…

கற்றுக்கொள்.

கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.. கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.. வாழ்க்கை துன்பம் இல்லாமல் நகரும்!!  அதாவது எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டு ஏங்காதே அப்படின்னு அர்த்தம் 

சுந்தர யோக சிகிச்சை முறை 19

உணவைப்பற்றி ” ஆரோக்கிய உணவு ” நூல் வெகு விரிவாக விஞ்ஞான முறையில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒழுக்கத்தைப் பற்றி ‘ சாந்தி யோகம் ‘ என்ற நூல் சிறிது தனிப்பட்ட முறையில் விளக்குகின்றது. உழைப்பு எத்தகையது என்று ” ஆனந்த ரகசியம் ” வலிவும், வனப்பும் ” என்ற நூல்களில் அறிவைத் தீட்டும் முறையில் காணவும். ஆனால் நோய் தடுத்தல் என்ற தொகுதிக்கு விஞ்ஞான அவசிய விளக்கமாக, உணவு ஒழுக்கம், உழைப்பு என்பவைகளைப் பற்றி இங்க திரட்டி சுருக்கமாக…