அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 23
பூதாபிஷங்க சுர நாடி ….. பூத பிரதேங்களினால் பயப்பட்டவனுடைய நாடியானது திரிதோஷ நாடியைப் போல் வாதபித்த சிலேஷ்ம நாடிகள் ஒன்றாய் சேர்ந்து ஏற்றத்தாழ்வு அன்றி சமானமாய் நடக்கும். ரோகாஹி தாப மிருத்யு நாடி லக்ஷணம் ….. வியாதி ஒன்றும் அல்லாமல் அகாலமரணம் சம்பவிக்கும்படி ஆனவனுக்கு சந்நிபாத நாடி நடக்கும். வேறு விதம் ….. வியாகூலத்தை அடைந்தவனுக்கும் பனியில் திரிகிறவனுக்கும் நாடியானது தன் இடத்தை விட்டு மேல் நோக்கி இருக்கும். அப்படி இருந்தாலும் அவனுக்கு தோஷம் ஒன்றும் சம்பவிக்காது.…