அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 20

சப்ததிவசாந்தரமிருத்யு நாடி ….. தேகமானது சாபவர்ஜிதமா இருக்கும்போது நாடிதனது கதியை தவிர்த்து க்ஷணகாலத்தில் தீவிரமாயும், க்ஷணகாலத்தில் சாந்தமாயும் நடையுள்ளதாயும் இருக்குமாகில் அவர் ஒரு வாரத்திற்குள்ளாக மரிப்பான். மூன்றா நாள் மிருத்தியு நாடி ….. அதிகோரமான சுரம் அடிக்கும்போது நாடியானது பனிக்கட்டிப்போலும், சீதளமாயும் இருக்கிறதல்லாமலும் திரிதோஷ ஸ்பரிச சம்பந்தம் பெற்றிருந்தால் அந்த நாடியையுடைய மனிதன் மூன்று நாளுக்குள்ளாக மரணமடைவான். நாலா நாளில் மரணமடையும் நாடி லக்ஷணம் …. வலது பாதத்தில் ஒரு நாடி அதி தீரவிரமாய் நடக்கிறதுடன் முகத்திலும்…