ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 37
கணவன், மகன், உடல் இவையெல்லாம் மாயையே. அவை மாயையால் ஏற்பட்ட பந்தங்களே, அவற்றினின்றும் உன்னை நீ விடுவித்துக் கொண்டாலன்றி, நீ முக்தியடையமாட்டாய். இவ்வுடலின் மீதுள்ள பற்றும், இவ்வுடலையும் அதனுள் உள்ள ஆன்மாவையும் ஒன்றெனக் கருதும் மனப்பாங்கும், மறைய வேண்டும். குழந்தாய், இவ்வுடல் எனப்படுவது யாது? (எரித்த பின்) மூன்று கிலோ சாம்பலேயன்றி வேறல்ல. பின் அதைப்பற்றி ஏன் அவ்வளவு ஆடம்பரம்? உடல் எவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அதன் முடிவு மூன்று கிலோ சாம்பலே தான், இப்படியிருந்தும் மக்கள்…