ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 24
தீமையைப் போக்கும் மருந்து நான். நான் குணமும் குறியுமற்றவன். நான் கருணையின் எல்லை. (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற நாலுவித புருஷார்த்தங்களையும் அளித்து அனைவரையும் பலவாறாய் விடுவிப்பவன் நானே. மூலிகைகளின் ஸாரம் நானே. உலகமாகிற சேலையின் ஊடும் பாவும் நானே. ஓங்காரமெனும் தாமரையினின்று எழும் ஆனந்தமாகிய நறுமணத்தால் மதங்கொண்ட தேனீ போன்றவன் நான். அறிபவன் நானே, அறிவின் சாதனங்களும் நானே, அறிபவன் அறிவு அறியப்படுவதென்ற மூன்றையும் கடந்து கேவலம் ஸத்ரூபமாயுள்ள ஆத்மாவும் நானே. பக்தியும் நானே,…