அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 16
ஜீவசாக்ஷினி நாடிகதனம் ….. மூலத்தின் நாடிக்கு ஜீவசாக்ஷி என்று பேர். அதன் கதி விசேஷத்தால் ரோகியின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியது. நாடி நாமங்கள் ….. நாடிக்கு – ஸ்நாயுவென்றும், பசயென்றும் ஹிம்ஸ்ரயென்றும், தமனியென்றும், தாமனியென்றும், தரயென்றும், தந்துகி என்னும் ஜீவிதக்கியயென்றும் ப்ரியாய நாமங்கள் உண்டு. நாடியின் குறிகள் ….. ரோகியின் மணிபந்தத்தில் தாதுவை வைத்தியன் பரீக்ஷிக்கும்போது தர்ஜனி விரல் (ஆள் காட்டி விரல்) அசைகிற நாடி, வாதமென்றும், நடுவிரலில் அசைகிற நாடி பித்தமென்றும், அநாமிகை அதாவது…