யோக மஞ்சரி.5 துருதுரா யோகம்

பொதுவாக சுனபா யோகத்தில் பிறந்தவன்அரசனாகவோ, அல்லது அரசனுக்கு ஒப்பானவனாகவோ இருப்பான். நல்ல கீர்த்தி, தனவரவு, தீக்ஷண புத்தி, இவைகளுடன் கூடியவனாகவுமிருப்பான். அனபா யோகத்தில்பிறந்தவன் பிரபுவாகவும், சுகவானாகவும், கியாதியுள்ளவனாகவும், ரோக மற்றவனாகவும் இருப்பான்.இவ்விதம் ஜாதக தத்வமென்ற ஜோதிஷ நூல் என்று சொல்கிறது சந்திர லக்னத்திற்கு இருபுறமும் அதாவது 2 – வது12 – வது ராசிகள் இரண்டு இடங்களிலும் கிரஹங்கள்இருந்தால் துருதுரா யோகமெனப்படும். பொதுவாகதுருதுரா யோகத்தில் பிறந்தவன் தன, வாகனாதிசுகமுள்ளவனாகவும், கிடைத்த விஷயங்களின் அனுபவத்தினால் உண்டான சுகத்தைஅனுபவிக்கிறவனாகவும் இருப்பான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 17

சிரவணத்தாலும் மனனத்தாலும் நீண்டகாலம் தொடர்ந்த இடை விடாத தியானத்தாலும் முனிவன் ஒப்புயர்வற்ற நிர்விகல்ப ஸமாதி நிலையையடைந்து பிரம்ம நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கிறான். ஆலமரத்தடியில் ஒரு விசித்திரம் காணப்படுகிறது. குரு யெளவனமாகவும், சீடர்கள் கிழவர்களாவும் இருக்கிறார்கள். குருவினுடைய உபதேசம் மெளனமாய் நிகழ்கிறது. சீடர்கள் சந்தேகங்களெல்லாம் முற்றுந் தீர்ந்தவர்களாகின்றனர். எனக்குச் சரண் தாயுமன்று, தந்தையுமன்று, மக்களுமன்று, சகோதரர்களுமன்று, மற்றொருவருமன்று. என்னுடைய குரு எந்தப் பாதத்தை என் தலையில் சூட்டினாரோ அதுவே எனக்குச் சரண். என் குருநாதரின் கருணாகடாக்ஷம் பூர்ண சந்திரனுடைய…