பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 9 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

அண்டத்திலிருந்து செயல்படும் இவைகள் பிண்டமான பூமி நீரில் அடங்கி பூமி நீர் இரண்டும் நெருப்பில் அடங்கி நிலம், நீர், நெருப்பு, மூன்றும் காற்றில் அடங்கி இவைகள் நான்கும் ஆகாயத்தில் அடங்கி ஒடுங்கி செயல்படும். இவ்வுண்மை நிலையை கண்டவரே வியோமவெளியான, பரவெளியில் நின்று ஒளிப்பிழம்பாக இருந்து அருள்பாலிக்கும் சித்தர், மகான், யோகி, மகரிஷி, போன்றவர்கள் இந்நிலையை வாசி மூலம் அறியும் பெரும் பாக்கியத்தை பெறும் வாய்ப்பு மனித பிறவிக்கேயாகும்..

காதல்.

ஒரு காலத்தில் நல்ல பண்புள்ளவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், நல்ல உணர்வுகள் உள்ளவர்களுக்கும், இடையே மட்டுமே மிக அபூர்வமாக இருந்து வந்த விஷயம் கால ஓட்டத்தின் வேகத்தில் நிலை தடுமாறி ஒரு சகதியானது துர்பலமே.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 8 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இவ்வமைப்பு பெற்ற கிரகங்கள் மனித பிறவி எடுத்த நாம் இப்பூமியில் அவதரித்த பிறந்த நேரத்திற்கொப்ப ஊழ்வினை புண்ணிய பாவங்களுக்கு தக்கபடி சோதிட சாஸ்திர ரீதியில் ஜாதகத்தில அமர்ந்து நடத்தும் நாடகங்களை செயல்பாடு இயக்கங்களை பற்றிய விசயங்களை பார்க்கலாம்.. நிலத்தின் இயக்க கர்த்தவான குரு வாரத்தை ( நாளை ) யும், நீரின் இயக்ககர்த்தாவான சுக்கிரன்-சந்திரன் திதியையும் நெருப்பின் இயக்க கர்த்தாவான சூரியன், செவ்வாய் நட்சத்திரத்தையும் காற்றின் இயக்க கர்த்தாவான புதன் யோகத்தையும், ஆகாயத்தின் இயக்க கர்த்தாவான சனி,…

எழுதாத விதி

மனிதன் எந்த சூழ்நிலையிலும் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட வேண்டும் என்பது எழுதாத விதி விதியை மாற்றி எழுதினால் மனிதன் ஒன்றை பெறுவதற்காக ஒன்றை இழந்துவிட கூடாது முக்கியமாக தான் மதிக்கத்தக்க விலை மதிப்பில்லாதது எனும் ஒன்றை இழந்துவிட கூடாது.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 7 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

 குரூர குணத்தின் செயலாளராக சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நின்று நர்த்தனம் புரியும் லீலையை சொல்லவும் வேண்டுமா? சத்தியம், தர்மம், போன்றவற்றிற்கு குரு, புதன் சுக்கிரன் அதர்மம் கலந்தது சந்திரன், சூரியன், சனி, செவ்வாய், ராகு தர்மம் அதர்மம் கலந்தது சந்திரன், கேதுவாக நின்று இயங்கும் இதே போல் நமது தேகத்தின் ஒவ்வொரு மயிர் துவாரத்திலும் நின்றுஇயங்கும் தெய்வம் கிரகம் நட்சத்திரம் தன் தேவதைகள் போன்ற அமைப்பை இதுவரையில் நாம் தத்துவார்த்தமாகவும் சித்தர்கள் ஞானிகள் மகான்களின் வழிமுறைகளிலும்…

ஞானம் அப்படின்னா என்ன

ஞானம்ன்னா என்ன தனக்குள் உண்டான அறிவுக்கு ஞானம்ன்னு பேர் முதிர்ந்த அனுபவ அறிவுக்கு ஞானம்ன்னு சொல்லலாமா கூடாது உனக்குள் உள்ள இருந்து அறிவு வரணும் அப்படி வந்தா மட்டுமே ஞானம் அப்படி வருமா வந்துருக்கே உதாரணத்துக்கு ரிஷிகள், யோகிகள்

பலவான்

மனம் எனும் குதிரையின் கடிவாளத்தை விட்டுவிட்டால் குதிரைகள் நம்மை அதன் இஷ்டபடி இழுத்து செல்லும். அதை இழுத்து பிடித்து நிறுத்துபவனே பலவான். மனதின் அலைகளை அடக்கி ஆள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ்நிலை ‍வெளிப்பாடே செயல் அமைதியோ அதன் உயர்நிலை வெளிபாடு. சோம்பலான மந்தநிலையை சத்துவம் என தவறாக எண்ணிவிட கூடாது.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 6 கோள்களின் கோலாட்டத்தின் படி

எலும்பு மாமிசம் தோல், நரம்பு, ரோமம் போன்றவற்றின் பராமரிப்பு குரு வேர்வை, மூத்திரம், வாய்நீர், உதிரம், விந்து போன்றவற்றின் பாராமரிப்பு சுக்கிரன்-சந்திரனும், பசி, தாகம், நித்திரை, மைதுனம்,சோம்பல் போன்றவற்றின் பராமரிப்பு சூரியன், செவ்வாயும்,  நடத்தல், இருத்தல் தாண்டல், படுத்தல் போன்றவற்றின் பராமரிப்பு புதன் பயம் மோகம், துவேசம் வெட்கம் திடம் போன்றவற்றின் பராமரிப்பு சனி-ராகு-கேதுக்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடும் ஆட்டம் தான் கோலாட்டம் 

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் —11

நாடிக்கியானம் ….. சீவ நிலை சில இடத்தில் நாபியைப்போல் சக்கிராகாரமாயும், சில இடங்களில் ஆமாதிசயம் முதலிய கோசாகாரமாயும், சில இடங்களில் இருதயாதி ஜீவகிருஹங்களாகவும் இருக்கும். இந்த சரீரத்தில் ஜீவன் தனது ஆகாமி சஞ்சித பிராப்தத்திற்கு சரியாக வசித்து இருப்பான். சிலந்தை தான் பிள்ளையை கூண்டில் விடாது வசிக்கிறதுப்போல் இந்த ஜீவன் பஞ்ச பிராணங்களுடன் கலந்து வசித்திருக்கிறான். யாராவது மேற்கூறிய ஜீவனை யோகாப்பியாசத்தால் பரப்பிரம்மமாக அறிகின்றார்களோ அவர்கள் காலபாசத்தில் சிக்காமல் வாழ்வார்கள். பிராணவாயு இருப்பிடம் ….. நாபி, தாது,…

குணங்களின் தன்மை 3

சத்வ குணம் – அமைதியும் சாந்தமும் முழு தெளிவும் கொண்ட நிலை, இது செயலற்ற நிலை அல்ல விளைவுகளின் தன்மையை முழுமையாக உணர்ந்த தீவிர செயல் பாட்டு நிலையாகும். அமைதியாய் இருப்பதே ஆற்றலின் வெளிப்பாடு.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 14

சிரத்தையும் பக்தியும் தியானயோகமும் முமுக்ஷு விற்கு முக்திக் காரணங்களாக வேத வாக்கியம் கூறுகிறது. எவனொருவன் இவைகளில் நிலையாயிருக்கின்றானோ அவனுக்கு அவித்தையால் கற்பிக்கப்பட்ட உடலாகிற தலையினின்று விடுதலை ஏற்படுகிறது. அஞ்ஞானத்தின் கூட்டுறவால்தான் பரமாத்மாவேயாகிய உனக்கு ஆத்மாவல்லாததுடன் பிணைப்பும் அதனின்றே பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஆத்மா, அனாத்மாவாகிய இரண்டையும் பற்றிய பகுத்தறிவினால் எழும் ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்துவிடும். சீடன் — குருதேவரே, கருணை கூர்ந்து எனது கேள்விக்குச் செவி சாய்த்தல் வேண்டும். அதற்கு மறுமொழியைத் தங்கள் வாயிலிருந்து…

குணங்களின் தன்மை 2

ரஜோ குணம் – அதிகாரமும், இன்பநுகர்ச்சி மட்டுமே கொண்டது. அதிகாரத்திற்க்கு வேண்டி எதையும் செய்யும் தேவைப்பட்டால் எதையும் செய்யாமலும் இருக்கும் இது போலவே இன்ப நுகர்ச்சிக்கு வேண்டியும் இயங்கும்

மகரிஷி தயானந்த ஜோதி கோவை

குருவருளும் திருவருளும் துணை நிற்க இந்த இணைய தளத்தில் சஞ்சரிக்கும் அன்பு வாசகர்களுக்கு என்றென்றும்என் மனமார்ந்த வணக்கங்கள். எத்தனையோ பிறவிகளின் தொடர்ச்சியால் ஏற்படும் பந்தம் தாய், தந்தை, மனைவி, மக்கள் மட்டுமல்ல, குருவும் கூட; யார் அந்த குரு? யாருக்கு வேண்டும் குரு? எதற்கு அந்த குரு? இப்படிப்பட்ட சிந்தனைகள் உடையவர்களுக்கும், தன்னந்தனியே முழு வாழ்க்கையைப் பார்க்க தைரியம் இருப்போருக்கும், வேண்டிய விஷயங்களைத் தாங்கி உலா வரும் இந்த இணைய தளத்தில் நான் மகரிஷியுடன் இப்புவிகால கணக்கின்…

எப்போதும் மனிதனாய் வாழ

உனக்காக வாழ்கிறேன் என்று உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!! ஆனால்..!!! உன்னால் தான் வாழ்கிறேன் என்று  யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம்  அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய்  என்று அர்த்தம்……!  நேசிப்பவர் சொன்னது ஆசையினால் அல்லது தேவையினால் சொல்லியிருக்கலாம் ஆனால் உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார் என்று உனக்கு தெரிந்தது என்றால் நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் அதை பிடித்துக்கொள் விட்டுவிடாதே  

மாமனிதர்கள்

துக்கமும், துயரமும் நிராசையும்,பேராசையும், எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும், அனைத்து மனிதர்களையும் ஆட்கொள்கிறது ஆனால் மாமனிதர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவதால் அவர்களை உலகம் மாமனிதர்கள் என்று ஒப்புக்கொள்கிறது.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள்.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள். விளக்கு வெளிச்சத்தை தானே பார்த்துக்கொள்ளும். அது போல நீ முடிவு செய்த செயலை மட்டும் செய்துகொண்டிரு அந்த செயல் உன்னை எங்கு கொண்டு போகவேண்டுமோ அங்கு கொண்டுபோய்விடும். கால வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாய் எங்கு சேர்த்தவேண்டுமோ அங்கு சேர்த்துவிடும் 

ஒரு எடக்கு மடக்கு கதை 2

அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க” என்றாள். தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?” என்று கேட்டாள். அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள். மறுநாள்……

ஒரு எடக்கு மடக்கு கதை 1

நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம். பூங்காவுக்கு அருகிலேயே, சிவ ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு,…

கர்மா செயல்படும் விதம் 4

நமக்கும் இவ்வுலகிற்க்கும் இவ்வுலகம் போல் அல்லது இதற்கும் மேற்பட்ட அண்ட பகிரண்டங்களையும் நாம் காண, அறிய, புரிய, உள்ள ஒரே கருவி நமது மனம் மட்டுமே உடல் பொறிகளும், புலன்களுடனேயே செயல்படும். ஆனால் மனம் இவைகள் இல்லாவிட்டாலும் செயல்படும் மனோவேகம் நம்மாள் கணக்கிட முடியாத வேகமாகும். இந்த அளவு ஆற்றல் உள்ள மனதை புரிந்து அதை நமக்கு பணியாளாகக்கொண்டால் நாம் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய முடியும். நாம் ஏமாந்து அதற்கு அடிமையாகிவிட்டால் நாம் அடைந்தது, அத்தனையும்…

இயற்கை அமைத்த ஸ்ரீ சக்கரம்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். ‘பில் மில்லர்’ என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில், 13.3 மைல் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார். ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதைப் பற்றி ஆராய்ந்தவருக்கு   அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும்…

கர்மா செயல்படும் விதம் 3

மனம் சும்மா இருந்தது என்றால் எண்ணங்கள் சிந்தனைகள் இல்லை. எண்ணங்கள் சிந்தனைகள் இல்லையென்றால் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லையென்றால் கர்மாக்கள் இல்லை. மனிதனிடம் இருக்கும் அற்புதமான பொக்கிஷம் மனம் ஆகும் அதன் வலிமையை, வல்லமையை, எத்தனை பேசினாலும் எத்தனை எழுதினாலும் தீராது. அந்த மனம் இல்லாததை இருப்பதாயும் இருப்பதை இல்லாததாயும் காட்டும் வலிமை உடையது.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 5 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

நமது தேகத்தின் கால் பகுதியை பிரம்மாவும், வயிற்றின் பகுதியை விஷ்ணுவும், மார்பின் பகுதியை ருத்திரனும், கண்டஸ்தானத்தின் பகுதியை மகேஸ்வரனும், புருவ மத்தியில் சதாசிவமும் நின்று மற்ற பகுதிகளை நவக்கிரகங்களுக்கு அளித்து நவக்கிரகங்கள் தனது இயக்கத்தை 27 நட்சத்திரங்களுக்கு அதன் தேவதைகளுக்கு பங்கிட்டு தந்து நடத்தும் மாயா வினோதத்தை என்ன சொல்வது? .

கர்மா செயல்படும் விதம் 2

ஒரு செயல் செய்யப்படும் போது அந்த செயலைப்பற்றிய நினைவு வருவது முதல்படி. பின் அதை செயலாக்கத்திற்க்கு கொண்டு வருவது இரண்டாம் படி. ‍அந்த செயலினால் உண்டாகும் விளைவு என்பது மூன்றாம் படி. நினைவு வரும் இடம் மனம் அதை செயலாக்கத்துக்கு கொண்டு வரும் போது அதனுடன் உடல் இணைகிறது. அதன் விளைவுகள் எனும் போது சில சமயங்களில் மனம் மட்டும் அனுபவிக்கிறது பலசமயங்களில் உடலும் மனமும் அனுபவிக்கிறது. இதை நாம் கர்மா என்கிறோம். இதை பெரியவர்கள் மனஸா…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 4 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது? நான்.. எனது..சாதூர்யம்,திறமை,..பராக்கிரமம்,..புத்திசாலித்தனம், முயற்சி,.. என்பதெல்லாம் எங்கே? இந்த மனிதனுக்கு எது சொந்தம்? மனிதனின் தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும், நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும். இம் மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம். இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும், சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும் நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்..

கர்மா செயல்படும் விதம் 1

மனிதன் செயல்படுவதற்க்கு பல உறுப்புகளின் செயல்கள் தேவைப்படுகிறது. அதில் மிக மிக முக்கிய பங்கு வகிப்பது உடலும், உயிரும் ஆகும். உடல் இயங்க காரியமாற்ற, சிந்திக்க, செயல்பட உடலின் பல உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகிறது. அப்படி செயல்பட ஆதாரமாய் இருப்பது கண்ணுக்கு தெரியும் உடலின் உள் கண்ணுக்கு தெரியா காற்று உட்சென்று வெளிவரும் இயக்கமே மற்றஎல்லா இயக்கங்களுக்கும் அடிப்படை காரணமாய் இருக்கிறது. இதை நாம் பிராணன் என்றும் உயிர் என்றும் அழைக்கின்றோம். இந்த உயிராகப்பட்டது இருக்க…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 3 கோள்களின் கோலாட்டத்தின் படி

ஜோதிமயமாக நின்று இயங்கும் பராசக்தியின் பல உரு தோற்றப் பிரிவுகளே படைக்கும் தொழிலுக்கான பிரம்மா இவரின் இயக்கத்தில் குரு காக்கும் தொழிலுக்கான விஷ்ணு இவரின் இயக்கத்தில் சுக்கிரன், சந்திரன், அழிக்கும் தொழிலுக்கான ருத்திரன் இவரின் இயக்கத்தில் சனி, ராகு, கேது அருள் பாலிக்கும் தொழிலுக்கான மகேஸ்வரன், இவரின் இயக்கத்தில் புதன் ஆக நவக்கிரகங்கள் அவரவரின் இயக்க கர்தாவின் ஏவலாளிகளாக நின்று செயல்படுவது தான் மனித தேகம்,மரம், செடி, கொடி, புல் பூண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன போன்ற…

சரியான கோணம்

பிரச்சனையை சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் பரிகாரம் கிடைக்கும். மரணத்தை சரியான கோணத்தில் இருந்து வரவேற்க்க முடிந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரை சந்தோஷம் கிடைத்துக் கொண்டே இருக்கும். அனுபவிப்பவர்களின் எல்லையை பொறுத்து இருக்கிறது வெற்றியின் ஆனந்தம் அனுபவித்து  பார்த்தவர்களுக்கு தான் அது புரியும்.

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 5

சூரியன், குரு சேர்க்கை 5, 2, 6, 9, 10 ஆகிய இடங்களில் இருந்து செவ்வாயின் தொடர்பை பெற்றால், உன்னத பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிட்டும். சூரியன், புதன் சேர்க்கை நல்ல பாண்டித்யமும், கல்வி அறிவும் குடும்ப சூழ்நிலையும் மனைவி வகையில் நல்ல நிலைமையும், தெய்வீக, ஆன்மீக தொடர்புகளில் பிரகாசமும், அரசியல், ராணுவம், காவல் போன்ற துறைகளில் புகழும் கிடைக்கிறது. சூரியன், சந்திரன் சேர்க்கை 5, 6, 10, 11ல் இருந்தால் மட்டுமே யோகம் தரும். குரு,…

முகமூடி

நம் எல்லோருக்கும் இயற்கை முகம் என்னும் சிறிய முகமூடி போட்டு மனம் எனும் பெரிய ராட்சசனை மறைத்திருக்கிறது. அதனால் தான் நாம் நம்மை பார்ப்பதில்லை ஏன்னா ராட்ஷசனை பார்க்க எல்லோருக்கும்  பயம்தானே

நாட்டின் நிர்வாகம் 2

நாட்டின் நிர்வாக நிலைகளில் சில சமயங்களில் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய துறையில் உள்ளவர்களின்  நியாயமும்,  நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களின் நியாயமும் வார்த்தை ஒன்றாய் இருந்தாலும் அர்த்தங்கள் சூழ்நிலை நிகழ்வுகளின் தரம் அதனால் உண்டாகும் விளைவுகளை கொண்டு அர்த்தங்கள் மாறுபடும். இது முழுக்க அரசு அதிகாரிகளின் விஷயம் இதை அறிந்து கொள்ள கட்சி தலைவர்களுக்கே முடியாத போது கட்சியின் தொண்டனுக்கு எப்படி தெரியும் ஆனாலும் அவனும் நாட்டின் குடிமகன்

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 4

இவரோடு சம்பந்தப்பட்ட சந்திரன், செவ்வாய் தீராத உடல் வியாதிகளையும், இனம் புரியாத மன பயம், காமஇச்சை அதிகரித்தலால் சில பல பாதிப்புகளையும் தருவார். தன் உடல்நிலையைத் தானே கெடுத்துக் கொள்ளும் மனோபாவத்தையும் தருவார்கள். இந்த விருச்சிக லக்கினக்காரகளுக்கு ” குருதிசை ” சுபத்தை தருகிறது. குற்றங்கள் நீக்கி நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது. செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது சேர்க்கை வாழ்க்கையில் பல வீழ்ச்சிகளைத் தருகிறது. ” உன்னதமான லக்கினம் ” என்று புகழ்ந்து சொல்லப்படும் விருச்சிகத்தை லக்கினமாகக்…

நாட்டின் நிர்வாகம் 1

ஒரு நாட்டின் நிர்வாகம் எனும் அமைப்பு  பல கிளைகளை கொண்ட அல்லது பல வேர்களை கொண்ட மரம். அது இயங்கும் சூட்சமம் நாட்டின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கே சரியாக தெரியாது. மக்களின் ஆதரவினால் வந்தவர்களிடம் மக்களாகியவர்கள் வேறு எதையும் அல்ல இதையும் கூட எதிர்பார்க்க கூடாது. நாட்டின் நிர்வாக சக்கரத்தின் பற்களில் பல துறைகள் உள்ளது. அதன் இயக்கங்கள் நாம் நினைக்கும் தர்மம், நியாயம், உண்மை போன்றவற்றிற்க்கு வித்தியாசமான அர்த்தங்களை கொண்டிருக்கும்.

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 3

செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவர்களின் தொடர்பை பெற்றிருக்கும் இந்த விருச்சிக லக்கினக்காரகர்கள் தீய செயலுக்கு உட்படுவதும், சூதாட்டம், மது, மங்கை போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பலருக்கு அனேக மனைவிகள் உண்டாவதும் உண்டு. இத்தகைய அமைப்பு பெற்றவர்களில் சிலர், ‘கொலை பாதகம் ‘ ராகு, கேதுவுடன், புதன் சேர்க்கை பெற்றிருக்கும் அமைப்புக்கொண்ட விருச்சிக லக்கினக்காரகர்கள் நல்ல நிலைமையில் இருப்பதையும் காண்கிறோம். குரு, புதன், சேர்க்கை புத்திர நாசத்தையும் குடும்பம் பாதிப்படைதலும் மூடத்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 28

அநேக நோன்புகள் நோற்றலின் பயனாகவே மனத்தைத் தூயதாக்க முடியும். இறைவன் தூய்மை உருவினன். ஆதலின் நோன்பின்றி அவனைக் காணமுடியாது. ஒருவன் நாள்தோறும் பதினையாயிரம் முதல், இருபதினாயிரம் வரை இறைவன் பெயரை ஜபிப்பானாகில், மனத்தை நிலைநிறுத்த முடியும். இது முற்றிலும் உண்மை. நானே அதை உணர்ந்திருக்கிறேன். இம்முறையை அவர்கள் கடைப்பிடிக்கட்டும். முயற்சியில் தோல்வியைடந்தால், பிறகு முறையிடலாம். அடங்கிய மனத்தோடு ஒரு முறை இறைவன் பெயரை உச்சரிப்பதானது, அலைக்கழிக்கப்படுகின்ற மனத்தினால் இலட்சம் தடவை அப்பெயரை உச்சரிப்பதற்கு ஈடாகும். நீங்கள் நாள்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம் 2

இந்த விருச்சிக லக்கினத்தாருக்கு சனி அதிக பாதிப்பைத் தருவதில்லை. இந்த சனியோடு புதன், குரு சேர்க்கை பெறின், ஏதோ ஒரு வகையில் திறமை பெற்றவராகவும், தரித்திரமில்லா வாழ்க்கை வாழ்பவராகவும், வாக்கு மேன்மை தெய்வ பலம் ஆகியவை சிறந்து விளங்கும் படி இருப்பதையும் நடைமுறையில் காணலாம். விருச்சிக லக்கினத்திற்கு 2, 5க்குரிய குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார். இவரோடு சம்பந்தப்பட்ட சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் ஆதிபத்திய காரகப்படி, நல்ல யோகத்தை தர காரணமாகிறார்கள். நடைமுறையில்…

கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு விருச்சிக லக்கினம். 1

”தேளினிற் செனித் தோற்கிரு சுடரோடுந் தேவர்கட்கிரை வனுஞ்சுபராய் கோளாறு சேய் மாலுசனனுமதர் குபேரனுமி ரவியும் யோகர் கேளுடன் கூடிலி ராஜயோக மதாங் கிளத்தியவசுபர் மாரகராய் நாளுமே கொடுப்பர் குருசனி கொல்லார் நங்கையற்கினிய தெள்ளமுதே ” (யவண காவியம் ). ”புந்தியஞ்சேயும் புகரும் பொல்லாக் கொடியர் இந்து வாரத்தனே யேந்தினழயாய் – சந்ததமும் நல்லனிஞ் ஞால நலனறிப்போன் ஞாயிறுடன் அல்லவனுமாகவறு ” ( தாண்டவமாலை ) ” ஏய தேள்புதன் சேயும்பளிங்கே இயன்ற பாவர் இந்து சுபன் ”…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 2 கோள்களின் கோலாட்டத்தின் படி

பஞ்சபூதங்களான பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றதன்மைகளின் பிரதிபலிப்பாக குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்,செவ்வாய், புதன், சனி, ராகு, கேது முறையே பூமி, நீர், நெருப்பு, காற்று,ஆகாயம் என்ற இயக்கத்தை எடுத்துக் கொண்டு மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை தன்னுள் அடக்கி மனிதனை இயக்கும் கர்த்தாவாகதிகழ்ந்து சிவசக்தி சொரூபமாக நின்று இயங்கும் ” ஜம் ” பீஜத்தின் தன்மையான ‘‘ நகாரம் ’’ இதுவே. லம்,  ‘ க்லீம் ’ பீஜத்தின்…

7- வது அத்தியாயம், அர்க்களா பலன் ஜெயமுனிமதம். 2

9. அர்க்கள கிரகத்தினால் உண்டாகக்கூடிய பாபஅர்க்களப்பலனை அந்தக் கிரகத்திற்கு ஐந்தாவது, ஒன்பதாவது, பாவத்திலுள்ள கிரகம் மாற்றிவிடும். 10. மேற்சொல்லிய மூன்று, பத்து, பன்னிரண்டில் உள்ளகிரகம் வலிவாக இருந்தால்தான் சுப அர்க்களப் பலனையோ, பாவ அர்க்களப் பலனையோ மாற்றும்,பலவீனமாயிருந்தால் மாற்றாது. 11. ராசி அர்க்களம் கிரக அர்க்களம் என இரண்டுவிதங்களிருப்பதால் இவற்றால் ஆராய்ச்சி செய்யவும். இவைகளில் எவரெவருடைய தசைகள் நடக்கின்றனவோஅவரவர்களின் பலன்களுண்டாகும், எந்த ராசியில் கிரகமிருந்தாலும் அவருடைய தசையின் புத்தி காலத்தில்பலன்  உண்டாகும். 12. 1 – வது…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். பிராணபதனுடைய துவாதச பாவபலன்.2

7. ஏழாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் பொறுமையுடைவன். எப்போதும் காமீ, அதிக தீவிர கோபிஷ்டன். சிவந்த சரீரமுடையவன், கெட்டவர்களைக் கொண்டாடி பூஜிப்பவன், கெட்ட புத்தியடையவன். 8. எட்டாமிடத்தில் பிரணபதன் இருந்தால் ஜாதகன் ரோகத்தால் சபிக்கப்பட்ட அங்கங்களுடையவன், அரசன் பந்து வேலையாட்கள் புத்திரன் இவர்களால் பீடிக்கப்பட்டவன் துக்கமுடையவன். 9. ஒன்பதாமிடத்தில பிராணபதன் இருந்தால் ஜாதகன் புத்திரருடையவன், தனம் நிறைந்தவன், புகழுடையவன். இஷ்டமாய்ப் பார்க்கத் தகுந்தவன். எப்போதும், அதிர்ஷ்டமுடையவன், நல்ல ஆழ்ந்த யோசனையுடையவன். 10. பத்தாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன்…

பராசராஹோரை 6-வது அத்தியாயம். பிராணபதனுடைய துவாதச பாவபலன்.1

1. ஜென்ம லக்கினத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் ஊமையாவன், பயித்தியம் பிடித்துவிடும். ஜடனாவன், அங்கவீனனாவன். துக்கமுடையவன் கிரசன் அதாவது மெலிந்தவனாவன். குறைவுடையவன், ரோகியாவன். 2. ஜென்மலக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தில் பிராணபதன் இருந்தால் வெகு தனம், ‍ வெகு தான்னியம், வெகு வேலையாட்கள், வெகு குழந்தைகள், நற்பெயர் இவற்றையுடையவன் ஆவான். 3. மூன்றாமிடத்தில் பிராணபதன் இருந்தால் ஜாதகன் கொலை செய்வோன் காதகன், கர்வத்துடன் கூடியவன், நிஷ்டூரமுடையவன், அதிக திருடன் ( பிராம்மணனாயின் யாகாதிகர்மங்களை விட்டொழிந்தவன் ), குரு பக்தியில்லாதவன்.…

( பராசரா ஹோரை ) 6-வது அத்தியாயம். குளிகனின் துவாதச பாவ பலன். 2

7. ஏழாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ( ஜிரன் ஸ்திரீ ) திருடன், ஜாரன், பாபத்தைச் செய்பவன், மெல்லிய அங்கங்களுடையவன், சினேகிதத்தையுடையவன். ஸ்திரீயின் திரவியத்திலேயே ஜீவிப்பவன். ஏழாமிடத்தில் சனியிருந்தாலும் இப்பலன் பொருந்தும். 8. எட்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் பசியுள்ளவன், துக்கமுடையவன். குருரன், தீக்ஷண்ணிய ரோஷமுடையவன், கொஞ்சமும் தயையில்லாதவன், தனமின்றியிருப்பவன் பிராணனை அழிப்பவன், குணமும் இல்லாதவன். 9. ஒன்பதாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் வெகு கிலேசமுடையவன், மெல்லிய சரீரமுடையவன், துஷ்டச் செய்கையும் தயவேயில்லாதவனுமாவான். ஒன்பதாமிடத்தில் சனியிருந்தாலும் இதே பலன்தான். மந்தமதியுடையவன். பிசினி…

பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். குளிகனின் துவாதச பாவ பலன். 1

1. ஜென்ம லக்கினத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் எப்போதும் ரோகபீடையுடையவன், காமீ, பாபாத்மா மூடனில் அதிக கிரமமூடன், நிதானமுடையவன். கெட்ட பாவங்களுடையவன். அதிக துக்கமுடையவன். 2. ஜன்மலக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் இயற்கைக்கு மாறுபாடானவன், துக்கமுடையவன், விசனமுடையவன், அடக்கமில்லாதவன், தனமில்லாதவன். 3. மூன்றாமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் அழகான அங்கங்கள் உடையவன். சுகமுடையவன், புண்ணியமுடையவன், சரிஜனங்களுடன் கூடியவன், நல்லோரிடம் அதிக அன்புடையவன், ராஜ பூஜையடைவான். 4. நான்காமிடத்தில் குளிகனிருந்தால் ஜாதகன் ரோகியாவன், சுகமில்லாதவன், எப்போதும் பாபத்தையே செய்பவன், வாதபித்தாதிக்கியமுடையவன். 5.…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 10

பிரம்ம லோக பிராப்திக்கு வேண்டிய உபாசனை செய்தவர்களை சூஷ்ம ரூபமாகிய சுஷம்னா நாடி மூலாதாரத்திலிருந்து இடகலை பிங்கலையின் மத்தியமாக சூக்ஷ்மரூபத்துடன் நடுமுதுகிலுள்ள வீணாதண்டமென்கிற எலும்பின் மார்க்கமாய் சஹஸ்ராரத்தையும் பிரம்மாந்திர மூலமாய் சூரியமண்டலம் வரையிலும் வியாபித்து பிரம்மலோகத்தை அடையச் செய்யும். பர பிரம்ம நிலை ….. சகல பிரபஞ்சாத்மக பரஞ்சோதி சொரூபியாகிய பர பிரம்மம் இந்த சுஷம்னா நாடியில்  வசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாடி அநேக மார்க்கங்களை உண்டாக்கி அனேக முகங்களுடன் வியாபித்திருக்கும். இந்த நாடிதான் சுத்த பரப்பிரம்மத்திற்கு…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 27

கேள்வி – அம்மா, என் மனம் அடிக்கடி அமைதியை இழந்து சிற்றின்பத்தையே நாடுகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது. பதில் – இதற்காக நீ பயப்பட வேண்டாம். இக்கலியுகத்தில் மனத்தால் தீங்கு நினைத்தால் பாவமாகாது என்பதை நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இக்காரணத்தால் ஏற்படும் கவலைகளினின்றும் உன் மனத்தை விடுவி. இதற்காக நீ அஞ்ச வேண்டா. குழந்தாய், இம்மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. வாயுவின் வேகத்தோடு மனமும் ஓடும். ஆகவே, ஒருவன் எந்நேரமும் விவேகத்தால் ஆராய்ந்து வரவேண்டும் இறைவனைக் காண…

பர்வதாசனம் — PARVATHASANAM (பருமன் அல்லது ஊளைச்சதையினைக் குறைத்தல் )

பெண்கள் மெல்லிய உடலமைப்பும் கட்டான உறுப்புகளும் பெற்றிருந்ததால் அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். கவனமின்மையின் காரணமாக பெண்கள் தங்கள் உடலை தடிக்கச் செய்து பார்க்க அசிங்கமாக இருக்கிறார்கள். செய்முறை – பர்வதாசனத்தில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு  மேலாக நன்றாக வளைவு இல்லாமல் நீட்டி இரு கைகளின் விரல்களையும் பின்னிக்கொண்டோ அல்லது ஒன்றின் மீது மற்றொன்று இறுக்கமாகச்  சேர்ந்து இருக்கும்படியோ வைக்கவும். விரல்களை மடக்காமல் நீட்டிவிடவும்.  இரண்டு தோள்களையும் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படி செய்து  தலையை நேராக…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 13

குரு  கற்றுணர்ந்தவனே, பயப்படாதே, உனக்கு அழிவில்லை. பிறவிக்கடலைக் கடப்பதற்கு வழி உள்ளது. முனிவர்கள் எதனால் இதன் அக்கரையை அடைந்தார்களோ அந்த வழியையே உனக்குக் காட்டித் தருகிறேன். சிறந்ததொரு வழி (ஸம்ஸார பயத்தைப் போக்குவது) உள்ளது. அதனால் பிறவிக் கடலைக் கடந்து உயர்ந்த ஆனந்தத்தை அடைவாய். உபநிஷத் வாக்கியங்களின் அர்த்தத்தை ஆராய்வதால் சிறந்த அறிவு பிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாக ஸம்ஸார துக்கத்திற்கு முற்றிலும் அழிவு ஏற்படுகின்றது.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 9

பிங்களா நாடி ….. யாகம் முதலிய புண்ணிய கருமங்கள் செய்கிறவர்களை பிங்கலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இருதய ஸ்தானத்தின் வலது பக்கமாய் சிரசிலிருந்து சஹஸ்ராசக்கிரத்தை ஆதாரமாய்க் கொண்டு அக்கினி மண்டலம் வரையிலும் வியாபித்து அர்சராதிமார்க்கமாய் தேவலோகத்திற்கு போகும்படி செய்யும் இதற்கு தேவபானமென்றும் சொல்லுவார்கள். இட  நாடி ….. பிதுருலோக பிராப்தி அடையும் படியான கருமங்களை செய்தவர்களை இடகலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து பிரயாணமாகி இருதய ஸ்தானத்து இடது பக்கமாய் சிரசிலிருக்கும் சஹஸ்ராசக்கிரத்தை அடைந்து சந்திரமண்டலம் வரையிலும்…