ஷோடச உபசாரங்கள் என்பவை யாவை?

ஷோடச உபசாரங்கள்  என்பது  ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், ஆசமனம், ஸ்னானம், வஸ்த்ரம், யஞ்யோபவீதம், ஆபரணம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், ப்ரதக்ஷிண நமஸ்காரம் இவைகள் அனைத்தும் சேர்ந்ததே ஷோடச உபசாரங்கள் எனப்படும் 

பகவத்கீதை தத்துவம் 1

“உத்தவர் கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.’திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை…