பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 1 கோள்களின் கோலாட்டத்தின் படி
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது என்றால் எங்கும் செல்ல வேண்டாம். இதன் பொருள் நம்மிடமே உள்ளது. அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு பிண்டமான நம்மை ஆட்கொள்வதில் இருந்தே அறிந்து கொள்ளலாம். அண்டத்தில் உள்ள கோள்களின் கதிர்வீச்சு பூமியில் பாய்வதையே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறோம். பஞ்ச பூதங்களை நவக்கிரகமாகவும், 27 நட்சத்திரங்களாகவும் பாகுபடுத்தி விட்டு இவைகளையே மனிதனின் அங்கங்களில் குடியேற செய்து வீட்டின் உரிமையாளராக பஞ்சபூதமும் அவரின் உதவியாளர்களாக…