வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4
ரிஷபம், கன்னி, மகரம் :- இது வைசிய பாவ ராசிகள். இதில் ஒன்றில் லக்னம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றில் இருந்தால் பணமே குறியாய் இருப்பார்கள். உழைப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள், எத் தொழில் செய்வதற்கும் தயங்காதவர்கள். எவ்வகையிலாவது வாழ வேண்டும் என்று குறிக்கோள் உடையவர்கள். சதா ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற பிரியம் உடையவர்கள். மிக ஏழ்மையான நிலையிலிருந்து பல கஷ்டங்களையும் துன்பத்துயரங்களையும், அனுபவித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். தனக்கு நன்மை…