கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மிதுனம்
மிதுனம் :- “தண்டுக்கொண்டு இல்புகே”என்ற இந்த ராசி ஆணும், பெண்ணும் இணைந்திருப்பதைப் போன்ற தோற்றமுடைய இந்த ராசி வான வெளியில் 60 பாகை முதல் 90 பாகை வரை வியாபித்துள்ளதாகும். கால புருஷனின் மூன்றாவது ராசியான இது ஆண் தன்மை உடையது. உபய ராசி இதன் அதிபதி புதன் ஆகும். ஒற்றை ராசி என்ற அமைப்பைக் கொண்டது. உறுதியும் துணிவும் மிக்கது. அதிக அளவு மூளை பலம் மிக்கது. அதிக புத்திசாலி தனத்தையும் மிகச் சிறந்த திறமையும்…