மனோதத்துவச்-சட்டம்.

புறமனத்தில் எழும் எண்ணங்களும், திட்டங்களும் நிறை வேறலாம், நிறைவேறாமலும் போகலாம். ஏனென்றால் புறமனதின் எல்லைக்கோட்டில் இருக்கும் நினைவிற்கு பந்தபாசம் உண்டு. ஆனால் புறமனதிலிருந்து அகமனதிற்குக் கொண்டு செல்லும் எண்ணங்களும், திட்டங்களும் பந்தபாசங்களுக்கு அப்பாற்பட்டவை, தோல்வி அறியாதவை. எனவே அவை நிறைவேறியே தீரும். இது மனேதத்துவச் சட்டம்.

பாதஹஸ்தாசனம் — PADHAHASTHASANAM

பாதஹஸ்தாசனம் — பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் மூங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிப்போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஒரிரு வாரங்களில் படத்தில காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு…