ஜாதகத்தை கொண்டு தோஷங்கள் அறியும் விதம்.
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதற்குடைய சூரியன் நீச்சம் அடைந்திருந்தால் பிதுர் தோஷம் உண்டு. இப்படி அமைய லக்னம் தனுசு ஆக அமைந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு. மேஷ லக்னத்திற்கு நாலுக்குடைய சந்திரன் விருச்சிகத்தில் நீச்சமடைந்து எட்டில் இருக்கும் போது மாதுர் தோஷம் உண்டு. சிம்ம லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய செவ்வாய் கடக ராசியில் 28 பாகையில் அமைந்திருந்தால் சகோதர வர்க்கத்தால் தோஷமும் கிராம தேவதைகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ரிஷப லக்னத்திற்கு ஐந்துக்குடைய புதன் மீனத்தில் நீச்சம் பெற்று 15…