தழுதாழை(clerodendrum phlomides)

தழுதாழை இலைகள் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. இதனை மைய அரைத்து காரக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மூட்டுவலி, கீல்வாதம் போன்றவை இதனால் குணமாகும். மேலும் செரிமானத் தன்மை அதிகரிப்பதுடன் உடலில் கழிவுகளும் வெளியாகும். தொடர்ந்து உபயோகித்துவர இளம்பிள்ளை வாதத்தால் ஏற்பட்ட முடக்கம் குணமாகும்