வாத நாராயணன் (delonix elata)
வாத நாராயணன் வாதமடக்கி ஆதி நாராயணன், வாதரச ஆகிய மாற்றுப் பெயர்களும் வாத நாராயனுக்கு உண்டு. இலைகள் கசப்பு சுவயும் வெப்ப தன்மையும் கொண்டவை. இதன் இலைகள் குழம்பு செய்யவும் துவயல் தயாரிக்கவும் வதக்கிச் சாப்பிடவும் பெரிதும் பயன்படுகிறது. இதனால் நரம்பு மற்றும் எலும்பு நோய்கள் போன்றவை கட்டுப்படும். வீக்கத்தை வடிய வைக்க கரைக்கும் பண்பும் இதற்கு உண்டு. தொடர்ந்து,வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு தயாரிப்பில் வாதநாராயணன் கீரையை சேர்த்துக் கொண்டு வரலாம்.