செம்பிரண்டை(Cissus repens)
செம்பிரண்டை பாரம்பரிய பழங்குடி மக்கள் இதன் பழங்களை விரும்பி உண்கிறார்கள். இலைகளை சூப் செய்தும் சாப்பிடலாம். இதன் அடி வேர்களை சிறு துட்டுகளாக்கி,அரைத்து இஞ்சிக் குழம்பு வைப்பது போல காரக் குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுப்பிடிப்பு அகலும், தொடை வலியும் குணமாகும்.