25 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் தியாகசீலர் என்றுதான் சொல்லவேண்டும். பொது நலத்தில் அதிக அக்கறையும், தொண்டு புரிபவர்கள் அரசியல் பதவிகளைப் பெற்று நாட்டுக்காக நல்ல காரியங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துபவர்கள். ஆன்மீக ஈடுபாடுகள், விசேஷ ஞானசித்தி உடையவர்கள்.