18 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.
அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் தங்களுக்கு என்று சில கருத்து, கொள்கைகளை உடையவர்கள். என்றாலும் மாறுபட்ட கருத்துடையவர்களையும் தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். தவறிக்கூட தமது கருத்து இதுதான் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். தமக்கு ஆகாதவர்களை சமயம் பார்த்து பழி தீர்த்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள். இவர்களுடைய செயல்கள் பிறருக்குப் புரியாத புதிராகவே இருக்கும், என்றாலும் தாமாக தீங்கு செய்யமாட்டார்கள்.