1 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் எதிலும் அவசரப் போக்கு உடையவர்கள், பொறுமை இவர்களிடத்தில் மிகவும் குறைவாக இருக்கும். தமது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு, பேசுவதும் செயல்படுவதும் நன்றாக இருக்காது. இக்குணத்தால் மற்றவர்கள் இவரைப் பற்றி விமர்சனம் செய்யப் படுப்படுவார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள், தமது எண்ணத்திலும், செயலிலும் ஒரு போதும் தவறே இருக்காது என்பது இவர்களுடைய எண்ணம், உறுதியான நம்பிக்கையாகும்.